காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை

By Thanalakshmi VFirst Published Jun 18, 2022, 4:18 PM IST
Highlights

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில், இன்று விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று முற்பகல் இந்த அளவு மேலும் உயர்ந்து நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியைக் அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி, ஐவர்பாணி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்நிலையில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அருவி உள்ளிட்ட இடங்களில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும், ஆற்றைக் கடந்து செல்லவும் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று ஆட்சியர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க: மேகதாது அணையை கட்ட விட மாட்டோம்.. காவிரி உரிமையை காக்க அரசு போராடும்.. முதல்வர் சூளுரை..
 

click me!