கவனத்திற்கு !! இன்று 13 மாவட்டங்களில் கனமழை.. எங்கெல்லாம் அலர்ட்.. வானிலை அப்டேட்

Published : Jun 18, 2022, 01:37 PM IST
கவனத்திற்கு !! இன்று 13 மாவட்டங்களில் கனமழை.. எங்கெல்லாம் அலர்ட்.. வானிலை அப்டேட்

சுருக்கம்

தமிழத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
காரணமாக,

18.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

20.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌.

21.06.2022. 22.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ பெரும்பாலும்‌ மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌
இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

18.06.2022. 19.06.2022: தமிழக கடலோரப்‌ பகுஇகள்‌, மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ பகுதி, மற்றும்‌ தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ இடையிடையே 60 இலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

18.06.2022. 19.06.2022. 20.06.2022: கேரளா - கர்நாடக கடலோரப்‌ பகுதிகள்‌, இலட்சத்தீவு பகுதி மற்றும்‌ அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

21.06.2022, 22.06.2022: கர்நாடக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌, மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதுகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுஇகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முதியோருக்கு இலவச பஸ் பாஸ்..இந்தெந்த தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம்.. அறிவிப்பு வெளியானது..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

10th Public Exam Answer Sheet Copy: மாணவர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! இன்று முதல் ஜூன் 23 வரைக்கும் டைம்! முக்கிய அறிவிப்பு வெளியானது!
Ration Card: புதிய ரேஷன் கார்டு ரெடி.. மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தோருக்கு தமிழக அரசின் குட்நியூஸ்!