யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பது தவறு… நடவடிக்கை பாயும்… எச்சரிக்கும் மா.சுப்ரமணியன்!!

By Narendran SFirst Published Dec 21, 2021, 2:45 PM IST
Highlights

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்றும், இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்றும், இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் கோமதி ஆகிய இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதை அடுத்து கோமதி அண்மையில் கர்ப்பமுற்ற நிலையில் அவருக்கு டிசம்பர் 13 ஆம் தேதி பிரசவ நாள் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி வரவில்லை என்றும் ஐந்து நாள் தாமதமாக டிசம்பர் 18 ஆம் தேதி கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது என்றும், இதனை அடுத்து லோகநாதன் மற்றும் அவருடைய அக்கா ஆகியோர் யூடியூபில் பார்த்து அதன்படி பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை இறந்து பிறந்ததாகவும் தாய்க்கு இரத்தப்போக்கு அதிகமானதாகவும் தெரிகிறது. இதையடுத்து அவரது மனைவி மயங்கிய நிலையில், அவரை அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். அங்கு அவரது மனைவி சிகிச்சை பெற்றுவரும் நிலையில் குழந்தை இறப்பு குறித்து லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை பிறப்பது மற்றும் பிரசவம் பார்ப்பது போன்றவை மருத்துவர்களின் கண்காணிப்பில் தான் பிரசவம் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலர் இன்னும் யூடியூப் பார்த்து குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சி, பிரசவம் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்து பிறந்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த  குழந்தை பெற்றதால் பரிதாபமாக குழந்தை இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சிகிச்சை பெற்றுவரும் கோமதி மற்றும் அவருடைய உறவினர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் யூடியூப் வீடியோ பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் லோகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்றும், இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாகக் கூறினார். மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு தொடங்கினால், முதல் மாநிலமாக தமிழகத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் கூறினார். வரும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கவனத்துடன் விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்றும், இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

click me!