love couples: சென்னையில் பயங்கரம்.. ரயில் முன்பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை.. சிதறி கிடந்த உடல் பாகங்கள்.!

Published : Dec 21, 2021, 12:08 PM IST
love couples: சென்னையில் பயங்கரம்.. ரயில் முன்பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை.. சிதறி கிடந்த உடல் பாகங்கள்.!

சுருக்கம்

சென்னை அம்பத்தூரில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை அம்பத்தூரில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அடுத்த முக்குரும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(25). இவர் சென்னையில் உள்ள பாடி பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.  அதே அகுதியில் வசித்து வந்த ஆந்திராவை சேர்ந்த சரண்யாஸ்ரீ(20). இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர் என்பதால் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இவரது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து இருவரையும் கண்டித்தனர். இதனால், இருவரும் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டு வந்தனர்.  இந்நிலையில், ஜெயக்குமார், சரண்யாஸ்ரீ இருவரும் தற்கொலை  செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, அம்பத்தூர்- திருமுல்லைவாயில் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு ஆணும், பெண்ணும் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருப்பது சரண்யாஸ்ரீயும், ஜெயக்குமார் என்பதும் தெரியவந்துள்ளது.

 மேலும், காதல் ஜோடிகளான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், காதல் ஜோடிகளான ஜெயக்குமார் – சரண்யாஸ்ரீ இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுதொடர்பாக அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!