Tamilnadu Rain: அச்சச்சோ.. உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. மீண்டும் மிரட்டப்போகும் கனமழை..!

Published : Dec 17, 2021, 08:12 AM IST
Tamilnadu Rain: அச்சச்சோ.. உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. மீண்டும் மிரட்டப்போகும் கனமழை..!

சுருக்கம்

வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் பெரும்பாலாலும் வறண்ட வானிலை நிலவுகிறது. 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வட கிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த மாதம் பெய்த கனமழை 2016ம் ஆண்டு பெய்த கனமழையை நினைவுப்படுத்தியது. தொடர்ந்து  சென்னையில் மழை விடாமல் கொட்டியதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு  ஆளாகினர். இதனால், சென்னையின் எழும்பூர், கொளத்தூர், வேளச்சேரி என நகரின் முக்கிய இடங்களும், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்தன. ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளைக்காடாக காட்சியளித்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கியதை அடுத்து ரயில், பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சென்னைக்கு வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து காணப்பட்ட நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீண்டும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில்;-  வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் பெரும்பாலாலும் வறண்ட வானிலை நிலவுகிறது. 

நாளை முதல் 19ம் தேதி வரை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

வரும் 17ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக 17ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?
காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு