‘TTFவோட பவர் தெரியாம இருக்கீங்க.. கொஞ்சம் தான் பொறுமை’ - மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிடிஎஃப் வாசன்!

By Raghupati R  |  First Published Sep 28, 2022, 6:42 PM IST

டிடிஎஃப் வாசன் கடந்த வாரங்களுக்கு முன்னர் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்துவை தனது சூப்பர் பைக்கில் அமர வைத்து சாகச பயணம் மேற்கொண்டார்.


Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த 22 வயதான டிடிஎஃப் வாசன் நடத்தி வருகிறார். இவர் அவ்வப்போது பைக்கில் பயணம் செய்வதையும் அதில் செய்யும் சாகசங்களையும் வீடியோவாக போடுவார்.

பைக்கில் ஸ்டன்ட் செய்தல், வேகமாக செல்வது, பைக்கை தூக்கி ஓட்டுவது, ரேஸ் உள்ளிட்டவைகளை இவர் வீடியோ எடுத்து போட்டு வருகிறார். அதே வேளையில் தான் செய்யும் ஸ்டன்டுகளை யாரும் பயிற்சி இல்லாமல் செய்ய கூடாது என்ற அறிவுரைகளையும் வழங்கி வருவார்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் 243 கிமீ. வேகத்தில் வாகனத்தை இயக்கிய போதே பெரும் கண்டனங்கள் எழுந்தன.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..கொஞ்சம் பொறுங்க..பண்ருட்டி ராமச்சந்திரனை திடீரென சந்தித்த ஓபிஎஸ் - எடப்பாடியை அலறவிட்ட ஓபிஎஸ்!

டிடிஎஃப் வாசன் கடந்த வாரங்களுக்கு முன்னர் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்துவை தனது சூப்பர் பைக்கில் அமர வைத்து சாகச பயணம் மேற்கொண்டார். எதிர்திசையில் வாகனங்கள் வரிசையாக வந்து கொண்டிருந்த நிலையில் 150 கி.மீ வேகத்தில் சென்றார். மேலும் அவரது சாகசத்தை கண்டு ஜிபி முத்து அரண்டு போனார். நடுநடுவே இரு கைகளையும் விட்டுவிட்டு வாகனத்தை இயக்கினார் வாசன்.

 அவரது யூடியூப்பில் போட்ட இந்த வீடியோ வைரலானது. பிஸியான சாலையில் இத்தனை வேகமாக செல்வதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். பின்னால் அமர்ந்திருந்த ஜி.பி முத்து ஹெல்மெட் ஏதும் அணியாமல் இருந்தார். தங்களது சேனலுக்கான வியூஸ்களை அதிகரிப்பதற்காக இவ்வாறு மனித உயிர்களுக்கு உலையை வைக்கும் நபர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், அவர் மீது போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. போலீசார் டிடிஎஃப் வாசனை தேடி வந்த நிலையில், நேற்று மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு அவர் சரணடைந்தார். பிறகு அவர் இரண்டு உத்திரவாதம் பெறப்பட்ட பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்  டிடிஎஃப் வாசன்.

இதையும் படிங்க..அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு !

அந்த வீடியோவில், ‘டிடிஎஃப் ஓட பவர் தெரியாம விளையாண்டிட்டு இருக்கீங்க நியூஸ் சேனல்ஸ் அப்படின்னு கேட்கணும்னு தோணுது, ஆனா கேட்க மாட்டேன். ஏன்னா நானும் சுமுகமா போலாம்னு தான் நினைச்சுட்டு இருக்கேன். அதனால நியூஸ் சேனல் உங்களை பார்த்து எனக்கு பயம் கிடையாது. எனக்கு யாரை பார்த்து பயம் கிடையாது. உங்களுக்குன்னு ஒரு எல்லை இருக்கு. அந்த எல்லையை மீறி போறீங்க.

உங்களுடைய லிமிட் என்னவோ அப்படியே இருங்க என்னை பத்தி போலியான செய்திகளை பரப்பாதீங்க. டிடிஎஃப் வாசன் மெரட்டரான்னு நினைப்பீங்க ஆனா நான் மிரட்டல யூட்யூபர்ஸ் எல்லாருக்கும் நான் ஒரு விஷயத்தை சொல்லிக்கிறேன். எத்தனையோ யூடியூபர்களை இவங்க செஞ்சுட்டாங்க. என்னையும் செஞ்சுட்டாங்க, மதன் அண்ணனையும் செஞ்சுட்டாங்க, இர்பான்னையும் செஞ்சுட்டாங்க.

அடுத்து நீங்களா கூட இருக்கலாம். அதனால உஷாரா இருந்துக்கோங்க. எதுக்காக அப்படி பண்றாங்கன்னா நம்ம கஷ்டப்பட்டு எவ்வளவு ஹார்ட் ஒர்க் பண்ணி இந்த இடத்தில் இருக்கோம் என்று அவங்களுக்கு தெரியாது. ஆனா இவன் இருக்க இடத்துல இவனுக்கு ஏதாவது ஒரு பிராப்ளம் வந்துச்சுன்னா அதை எடுத்து நம்ம நியூஸ் சேனல்ல போட்டு வியூஸ் ஏத்திக்கணும் அப்படின்னு நினைக்கிறாங்க. இதெல்லாம் வந்து ரொம்ப கேவலமான விஷயம்’ என்று பேசியுள்ளார் டிடிஎஃப் வாசன்.

இதையும் படிங்க..செப்டம்பர் 29 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!