சென்னையில் பெய்த திடீர் மழையால் 13 விமானங்களின் சேவை தாமதம்

By Dinesh TGFirst Published Sep 28, 2022, 5:58 PM IST
Highlights

சென்னையில் இன்று மாலை இடி, மின்னலுடன் பெய்த திடீர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 
 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையிலிருந்து  நன்பகல் வரையில் வெயில் கொளுத்தியது. ஆனால் பிற்பகல் 3.30 மணியில் இருந்து திடீரென கரும் மேகங்கள் சூழ்ந்து கொண்டு, இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.  

விடுப்பு கிடைக்காததால் நின்ற மகளின் நிச்சயதார்த்தம்..! எஸ் ஐக்கு வருத்தம் தெரிவித்து டிஜிபி கடிதம்

இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில், மழை பெய்த நேரத்தில் தரை இறங்க வந்த விமானங்கள் தரை இயங்காமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. திருச்சி, புனே, கொல்கத்தா, டெல்லி, மதுரை, பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து, சென்னைக்கு வந்த  6 விமானங்கள், தரையிறங்காமல் நீண்ட நேரமாக வானில் வட்டம் அடித்து பறந்து கொண்டு இருந்தன. அதன்பின்பு மழை சற்று குறைந்ததும் இந்த விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக, தரையிரங்க அனுமதிக்கப்பட்டன.

மூன்றாக பிரிகிறதா சென்னை? சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் முடிவு என்ன?

அதை போல் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், கவுகாத்தி, கொல்கத்தா, கோவை, டெல்லி, மதுரை  போன்ற நகரங்களுக்கும், இலங்கைக்கு புறப்பட வேண்டிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இந்த திடீர் மழை, இடி, மின்னல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை மொத்தம் 13 வருகை, புறப்பாடு விமானங்கள் தாமதம் ஆகின. இதே போன்று பிற பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் காரணமாக வாகன போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டது.
 

click me!