மாணவர்கள் கவனத்திற்கு !! நாளை இந்த மாவட்டத்தில் பொதுவிடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு..

By Thanalakshmi V  |  First Published Sep 28, 2022, 5:05 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சியில்  சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி அப்பகுதியில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 


தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சியில்  சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி அப்பகுதியில் பள்ளிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி சாதாரண தேர்தலுக்கான (Ordinary Election) வாக்குப்பதிவு 29.09.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்படி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு 29.09.2022 அன்று பொதுவிடுமுறை  அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

click me!