திறந்த வெளியில் உடை மாற்றும் பெண்கள்: மாவட்ட நிர்வாகத்தை வசைபாடும் பயணிகள்

By Dinesh TGFirst Published Sep 28, 2022, 6:33 PM IST
Highlights

தென்காசி மாவட்டம் குற்றலாம் பிரதான அருவியில் பெண்கள் உடை மாற்றும் அறை முறையாக பராமரிக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் திறந்த வெளியில் உடை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலியில் இருந்து அண்யைில் பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்திற்கு பிரதான வருவாய் குற்றலத்தை மையமாகக் கொண்டே உள்ளது. இங்கு பிரதான அருவி, ஐந்தருவி, பழைய அருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட பல அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் நீராடி மகிழ அண்டை மாவட்டங்கள்  மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

அம்பேத்கர் பிறந்த நாளில் பாபரி மசூதி இடிப்பு; காந்தி பிறந்தநாளில் RSS பேரணியா? ஜாவாஹிருல்லா அதிரடி முடிவு

இந்நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் பிரதான அருவியின் அருகில் உள்ள பெண்கள் உடைமாற்றும் அறை மீது பெரிய மரம் விழுந்து மேற்கூரை தேமடைந்தது. மேலும் மரத்தின் ஒரு பகுதி எப்பொழுது வேண்டுமானாலும் அறை மீது விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதனால் அச்சமடைந்து சுற்றுலா வரும் பெண்கள் அருவியில் குளித்துவிட்டு உடை மாற்றும் அறைக்கு அருகில் திறந்த வெளியில் உடை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பெய்த திடீர் மழையால் 13 விமானங்களின் சேவை தாமதம்

நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பகுதியில் இதுபோன்ற நிலை உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருத்தமடைந்துள்ளனர். மாவட்டத்திற்கு வருவாய் ஈட்டித்தரும் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பராமரிக்க மாவட்ட நிர்வாகத்திடம் பணம் இல்லையா? அல்லது பணம் இருந்தும் மனம் இல்லையா என சுற்றுலா பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

click me!