
இராமநாதபுரம்
நகராட்சி வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்துக் கட்சி சார்பில் வரும் 9-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு திமுக நகர் செயலாளர் நாசன்கான் தலைமைத் தாங்கினார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் சி.ஆர்.செந்தில்வேல், தாலுகா செயலாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்ட் ந நிர்வாகி முருகானந்தம், தமிழ் தேசிய முன்னனி மாநில நிர்வாகி கண்.இளங்கோ, இந்து மக்கள் கட்சி பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்க் கூட்டத்தில், "நகராட்சி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நகராட்சி அலுவலகம் முன்பு வரும் ஜனவரி 9-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அதற்கு முன்பாக 8-ஆம் தேதி போராட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்படும்" என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.