வெயிட் அண்ட் சீ! அதிமுகவில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு! ட்விஸ்ட் வைத்து பேசிய சசிகலா! இபிஎஸ்க்கு சிக்கல்

Published : Oct 30, 2025, 08:18 PM IST
sasikala

சுருக்கம்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிறங்கியுள்ள சசிகலா, அதிமுகவில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று ட்விஸ்ட் வைத்து பேசியுள்ளார். இது இபிஎஸ்க்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். ஆனால் அதிமுக பல்வேறு பிரிகளாக உள்ளது. ஏற்கெனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் எடப்பாடிக்கு எதிராக நிற்கும் நிலையில், செங்கோட்டையனும் இபிஎஸ்க்கு எதிராக திரும்பினார்.

எடப்பாடிக்கு எதிராக ஒன்றிணைந்த ஓபிஎஸ் அன் கோ

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் தொடர்ந்து பேசி வந்தார். இதற்கிடையே இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஒன்றிணைந்த செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர், ''எடப்பாடியை வீழ்த்தும் வரை ஓயப்போவதில்லை'' என்று தெரிவித்தனர். இவர்களை தொடர்ந்து தேவர் நினைவிடம் வந்த சசிகலாவும் ஒபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்தார்.

களத்தில் குதித்த சசிகலா

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுகவில் ஒரு சர்ப்ரைஸ் உள்ளது என்று ட்விஸ்ட் வைத்து பேசினார். இது தொடர்பாக பேசிய அவர், ''அதிமுக பலவீனமாக உள்ள நிலையில், அதை போக்குவது தான் எனது வேலையாக இருக்கும். அதிமுகவில் இருக்கும் சிக்கலை அனுபவம் உள்ளவர்கள் தான் தீர்க்க முடியும். அதிமுக முடிந்து விடவில்லை. தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணையும். அதற்கான காலம் கனிந்து விட்டது. ஜெயலலிதாவின் ஆட்சி அமையும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வர விட மாட்டோம்'' என்று சூளுரைத்தார்.

அதிமுகவில் சர்ப்ரைஸ் இருக்கு

தொடர்ந்து அதிமுக ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, ''அதிமுக நிச்சயம் ஒன்றிணையும். அதிமுகவை கண்டிப்பாக மீட்பேன். இதற்காக எல்லாமே அதிமுகவில் சர்ப்ரைசாக நடைபெறும். 39 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தை நன்றாக அறிந்துள்ளேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்'' என்று கூறினார்.

இபிஎஸ்க்கு சிக்கல்

ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா ஆகியோர் தனக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சசிகலா கூறியுள்ள நிலையில் அவர் வைக்கப் போகும் வேட்டு என்ன? என அதிமுக மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் கதிலங்கிபோயுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!