“நாளை நிபந்தனைகளுடன் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை” - ராஜேஷ் லக்கானி

Asianet News Tamil  
Published : Nov 21, 2016, 05:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
“நாளை நிபந்தனைகளுடன் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை”  - ராஜேஷ் லக்கானி

சுருக்கம்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் கடந்த 19 தேதி இடை தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்கு என்னும் பணிகள் மூன்று தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் பணியில் 225 வாக்கு எண்ணும் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

3 தொகுதிகளிலும் 14 வாக்கு எண்ணும் மேசைகள் போடப்பட்டுள்ளது,

அரவக்குறிச்சி தொகுதியில் 18 சுற்றுகளும்,

தஞ்சாவூர் தொகுதியில் 20 சுற்றுகளும்,

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 21 சுற்றுகளும் உள்ளன.

ஒரு மணி நேரத்திற்கு 3 முதல் 4 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர் பெற்ற வாக்குகள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணும் அரசு அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் உள்ளிட்டோர் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுப்பப்படுவர்

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வெற்றி சான்றிதழ்களை பெறுவதற்காக உடன் 4 பேரை  மட்டுமே அழைத்து வர அனுமதிக்கப்படும்.

வாக்கு எண்ணும் செயல்முறை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்படும் என்றும், குறுந்தகடு பதிவு செய்யப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியின் பொறுப்பில் வைக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Supplementary Examination: மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா? கவலை வேண்டாம்! துணைத்தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?
Sanatana Dharma: சனாதனத்தை ஒழிக்கவே வந்துள்ளோம்.. தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பேச்சு.. பொங்கியெழுந்த அண்ணாமலை!