“சென்னை வந்தது புதிய 500 ரூபாய் நோட்டுக்கள்" - ஓரிரு நாட்களில் விநியோகம்...!!!

Asianet News Tamil  
Published : Nov 21, 2016, 05:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
“சென்னை வந்தது புதிய 500 ரூபாய் நோட்டுக்கள்" - ஓரிரு நாட்களில் விநியோகம்...!!!

சுருக்கம்

புழக்கத்தில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து பொதுமக்கள் தங்கள் கைகளில் இருப்பு வைத்துள்ள பழைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் வந்துள்ள நிலையில்,  புதிய 500 ரூபாய் நோட்டுக்கள்  இன்று முதல் வட மாநிலங்களில்  புழக்கத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகள் விமானம் மூலம் சென்னை வந்தது. இதையடுத்து, 30 பெட்டிகளில் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கியை வந்தடைந்தது.  எனவே, நாளை அல்லது நாளை மறுநாள் முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்று எதிபார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
ஆதாரம் இருக்கா?"னு கேட்ட திமுகவிற்கு மரண அடி! வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!