கார்த்திகை மாதத்தில் மழை, விவசாயம் பெருகும் - ஆற்காடு பஞ்சாங்கம் கணிப்பு

 
Published : Nov 21, 2016, 04:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
கார்த்திகை மாதத்தில் மழை, விவசாயம் பெருகும் - ஆற்காடு பஞ்சாங்கம் கணிப்பு

சுருக்கம்

கார்த்திகை மாதத்தில் மழை பெருகும், விவசாயம் செழிக்கும் என ஆற்காடு பஞ்சாங்கம் கணித்துள்ளது.

கடந்த 8ம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில், குறிப்பிட்ட தேதியில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை, ஆற்காடு பஞ்சாங்கம் கணித்துள்ளதாக ஏற்கனவே, NEWSFAST.IN இணையத்தில் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்.

அதேபோல், திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள துர்முகி வருட பஞ்சாங்கத்தில் கார்த்திகை மாதத்தில் 'அரசுக்கு வருவாய் பெருகும்' என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது இந்த தகவலும் இணையத்தில்  பரவி வருகிறது. மேலும் இந்த பஞ்சாங்கத்தில் கார்த்திகை மாதத்தில் நல்ல மழை பெய்யும் என்றும், விளைச்சல் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அரசு வருமானம் அதிகரிப்பு பலித்து விட்டது... அதே போல இந்த ஆண்டு மழை குறித்த பலிக்குமா? பார்க்கலாம்.

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!