
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே, முதல்வர் ஜெயலலிதா இறந்ததால், உணவு உண்ணாமல் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.
வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் (60). அ.தி.மு.க. தொண்டர். இவர் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை கேட்டதில் இருந்து உணவு உண்ணாமல் இருந்துள்ளார்.
உறவினர்கள் பலமுறை கட்டாயப்படுத்தியும், அவர் உணவு உண்ணவில்லை. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர், அவர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சைப் பெற்றபின் மீண்டும் உணவை உண்பதை நிறுத்தினார். இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
அதன் விளைவாக திங்கள்கிழமை இரவு பரமசிவம் உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த அவரது கட்சியினர், அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.