டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு; காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு

Published : Oct 11, 2023, 01:09 PM IST
டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு; காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு

சுருக்கம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியில் இருந்து 9 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 5 ஆயிரத்து 973 கன அடியும், கபினி அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 7 ஆயிரத்து 973 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

இதன் காரணமாகவும், ஒகேனக்கல் வனப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து, இன்று காலை  நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது 9 ஆயிரத்து 500 கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது. தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களின் நடனத்தை பார்த்து கதறி அழுத நீலகிரி ஆட்சியர்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனிடையே காவிரியில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட நீரின் அளவை திறக்க மறுக்கும் கர்நாடாக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மற்றும் பாசன வசதி பெறும் மாவட்டங்களான அரியலூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
அடுத்த 3 மணிநேரம் உஷார்! டெல்டாவில் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை! வானிலை மையம் அலர்ட்!