‘1 மாதத்திற்குள் விழுப்புரம் - திருவெண்ணெய்நல்லூர் இடையே ரயில் போக்குவரத்து’ - ரெயில்வே பாதுகாப்பு ஆணையர்

Asianet News Tamil  
Published : Oct 28, 2016, 02:34 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
‘1 மாதத்திற்குள் விழுப்புரம் -  திருவெண்ணெய்நல்லூர் இடையே ரயில் போக்குவரத்து’ - ரெயில்வே பாதுகாப்பு ஆணையர்

சுருக்கம்

விழுப்புரம் -  திருவெண்ணெய்நல்லூர் இடையே இருவழிப்பாதையில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் விழுப்புரம் -  திண்டுக்கல் இடையேயான 272 கி.மீ. தூரத்திற்கு இருவழிப்பாதை பணிகள் ரூ.1,200 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

இதில் திருவெண்ணெய்நல்லூர் - விருத்தாசலம் இடையே ஏற்கனவே இருவழிப்பாதை பணிகள் முடிவடைந்து அந்த பாதையில் ரெயில்கள் ஓடுகிறது.

இதன் தொடர்ச்சியாக விழுப்புரம்& திருவெண்ணெய்நல்லூர் இடையே 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிப்பாதை பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மும்முரமாக நடந்து வந்த நிலையில் இந்த பணிகள் தற்போது முடிவடைந்து ரெயில் போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது-.

இந்த பாதையில் ரயில் இயக்க ஏதுவாக தண்டவாளத்தின் உறுதித்தன்மை உள்ளதா, எலக்ட்ரிக் மின் கம்பிகள் சரியான முறையில் இணைக்கப்பட்டுள்ளதா, ரெயில்வே கேட், சிக்னல், பாலம் உள்ளிட்ட பணிகள் தரமான முறையில் செய்யப்பட்டுள்ளதா என ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சுதர்சன் நாயக் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுப்பணிகள் முடிவடைந்ததும் திருவெண்ணெய்நல்லூரில் இருந்து மாலை அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.

பின்னர் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சுதர்சன்நாயக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது

திருவெண்ணெய்நல்லூரில் இருந்து விழுப்புரம் வரை 110 கி.மீ. வேகத்தில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் விடப்பட்டது. இதன் சோதனை அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் ரெயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் இன்னும் 1 மாதத்திற்குள் இந்த இருவழிப்பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெரிவித்தார்.

 

 

PREV
click me!

Recommended Stories

உள்ளே வரும் முக்கிய கட்சி..! தென் தமிழகத்தில் சறுக்கல்... காத்திருந்து ஏமாந்த திமுக..!
விஜயகாந்துக்கு 'பாரத ரத்னா' வழங்கணும்.. தேமுதிக தீர்மானம்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!