‘அதிமுக தற்போது செயலற்ற அரசாக உள்ளது’ - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

Asianet News Tamil  
Published : Oct 28, 2016, 01:59 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
‘அதிமுக தற்போது செயலற்ற அரசாக உள்ளது’ - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

சுருக்கம்

செயலற்ற அரசாக இருக்கும் அ.தி.மு.க.வின் வேட்பாளர் அரவக்குறிசிசி தேர்தலில் தோற்பது உறுதி என கரூரில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழக இடைதேர்தல் நவம்பர் மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.சி.பழனிசாமி போட்டியிடுகிறார்.  

தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக மற்ற மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அரவக்குறிச்சி தேர்தலையொட்டி கரூர் கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டசெயலாளர்கள்,  நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கரூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு,

தற்போது அ.தி.மு.க. அரசு செயலற்ற அரசாக உள்ளது.  தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட்டிருந்தால் தி.மு.க. ஆட்சி அமைத்திருக்கும்.

தி.மு.க. சார்பில் போட்டியிடும், கே.சி.பழனிசாமி ஐந்து ஆண்டுகள் எம்.பி-ஆகவும். அரவக்குறிச்சி தொகுதியில் ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.-ஆகவும் இருந்து சிறப்பாக பணியாற்றி உள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில்பாலாஜி கரூர் எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளார், இவர் கரூர் தொகுதியில் பேருந்துநிலையம், மருத்துவகல்லூரி கொண்டு வருவேன் என பல வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு எதையும் நிறைவேற்றவில்லை.

எனவே, அ.தி.மு.க.வின் வேட்பாளர் அரவக்குறிசிசி தேர்தலில் தோற்பது உறுதி என்றும் தி,மு.க. எளிதில் வெற்றி பெறும் என்றும் எ.வ.வேலு தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

தேமுதிக யாருடன் கூட்டணி? 'முடிவெடுத்து விட்டேன்'.. ஆனால்?? சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா! முக்கிய அறிவிப்பு!
உள்ளே வரும் முக்கிய கட்சி..! தென் தமிழகத்தில் சறுக்கல்... காத்திருந்து ஏமாந்த திமுக..!