
திருவாரூரில், நவம்பர் 2-ஆம் தேதி மாவட்ட அளவிலான மாத விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் புதன்கிழமை அன்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “வயது வரம்பின்றி ஆடவர், மகளிருக்கு தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளும், ஆடவருக்கு வாலிபால், மகளிருக்கான ஹாக்கி போட்டிகள் நடைபெறுகிறது.
தடகள விளையாட்டில் ஆடவர், மகளிருக்கு 100, 200, 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஆண்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டம், மகளிருக்கு 800 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்படும்.
தடகளம், நீச்சல் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கும், வாலிபால், ஹாக்கி போட்டியில் முதல் இரு இடங்களைப் பெறுபவர்களுக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இப்போட்டி காலை 9 மணிக்கு தொடங்கும். போட்டியாளர்கள் குழு மற்றும் தனித்திறன் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே பங்கேற்கலாம்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04366- 227158 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.