'உங்க ஃபேமிலி தவெகவுக்கு ஓட்டு போட்டா தான் கல்யாணமே'.. நிச்சயதார்த்தத்தில் நண்பர்கள் அலப்பறை! வைரல் வீடியோ!

Published : Oct 14, 2025, 07:20 PM IST
tamilnadu

சுருக்கம்

ஒரு நிச்சயதார்த்த விழாவில் 'உங்க பேமிலி தவெகவுக்கு ஓட்டு போட்டால் தான் கல்யாணமே நடக்கும்' என்று மணமகனின் நண்பர்கள் மணமகளுக்கு நிபந்தனை போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நமது நாட்டில் 90 கிட்ஸ்கள் சிலர் கல்யாணம் எப்போது நடக்கும் என ஏங்கித் தவித்து வரும் நிலையில், 2k கிட்ஸ்கள் டக்குனு கல்யாணம் முடித்து வருகின்றனர். ஆனால் கல்யாணம் ஆகாத 90 கிட்ஸ்களின் புலம்பல்களை விட கல்யாணம் ஆன 2k கிட்ஸ்களின் புலம்பல் அதிகமாகி வருகிறது. ''கல்யானம் முடிச்சதோடு சரி, ஒரு பார்ட்டிக்கு போக முடியல. நண்பர்களை பார்க்க முடியல. நண்பர்களுடன் டூருக்கு போக முடியல' என ஏகப்பட்ட புலம்பல்.

மணமகன் நண்பர்கள் போடும் ஜாலியான நிபந்தனைகள்

இதனால் இப்போது கல்யாணம் முடிக்கும்போது மேடையிலேயே, ''கல்யாணம் முடிஞ்ச பிறகு நண்பர்களை பார்க்க விடணும். பார்ட்டிக்கு அனுமதி கொடுக்கணும்'' என்று மணமகளிடம் ஜாலியாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வதை மணமகனின் நண்பர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில், 'தவெகவுக்கு ஓட்டு போட்டால் தான் உங்க கல்யாணம் நடக்கும்' என ஒரு நிச்சயதார்த்தத்தில் மணமகளிடம் மணமகன் நண்பர்கள் ஜாலிக்காக ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

எங்க கூட இருக்கும்போது தொந்தரவு செய்ய கூடாது

அதாவது ஹரிஸ் என்ற இளைஞருக்கும், அர்ச்சனா என்ற இளம்பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது அந்த இளைஞரின் நண்பர்கள் போட்ட ஒரு ஒப்பந்தத்தை இளம்பெண் மேடையிலேயே படிக்கிறார். ''எல்லா வீக்டேஸ்ஸும் அவன் உங்க கூட இருக்கலாம். ஆனால் வீக் எண்ட்டில் எங்க கூட தான் இருப்பான். எங்க கூட அவன் வெளியில் வரும்போது எப்ப வருவ, எப்ப போவ என கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது'' என்று ஹரிஸ் நண்பர்கள் போட்ட ஜாலியான நிபந்தனைகளை அர்ச்சனா படிக்கிறார்.

 

 

உங்க பேமிலி தவெகவுக்கு ஓட்டு போடணும்

இதில் கடைசியாக அவர் படித்த நிபந்தனை தானஹைலைட். அதாவது ''கடைசியில் ரொம்ப முக்கியமான விஷயம். உங்க ஃபேமிலி தவெகவுக்கு ஓட்டு போட்டா தான் கல்யாணமே'' என்று மணமகள் அர்ச்சனா படித்தபோது ஹரிஸ் நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர். இதைப்பர்த்த தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள், ''இது தான் விஜய் அண்ணாவின் பவர். போகிற போக்கை பார்த்தால் திமுக தேர்தலில் டெபாசிட் கூட வாங்காது போல'' என்று புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர்.

எது நடக்காதோ அது எல்லாம் இருக்கு

அதே வேளையில் இந்த வீடியோவை பார்த்த பலரும் சில வேடிக்கையான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். ''எது நடக்காதோ அதை எல்லாம் எழுதி குடுத்துருக்கானுங்க'' என்று ஒருவர் மணமகனின் நண்பர்களுக்கும், தவெகவினருக்கும் ஷாக் கொடுத்துள்ளனர். ''இந்த தற்குறிகளின் உலகமே தனி தான்'' என்று மற்றொருவர் வேடிக்கையாக பதிவு செய்து வருகினனர். கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பெரும்பாலானவர்கள் விஜய் மீது எந்த தவறும் இல்லை என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி