சீமான் வீட்டில் திடீரென குவிந்த போலீஸ்..! சென்னையில் பரபரப்பு..! என்ன நடந்தது?

Published : Oct 14, 2025, 06:19 PM IST
seeman

சுருக்கம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த மர்ம நபர் யா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடு சென்னை நீலாங்கரையில் உள்ளது. இந்நிலையில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ''சீமான் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும்'' என்று கூறி இணைப்பை துண்டித்தார்.

சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இதனை தொடர்ந்து காவல் துறையினரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் சீமான் வீட்டுக்கு விரைந்து சென்று தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. ஆகையால் இது புரளி என்பது தெரியவந்ததது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் தொலைபேசி எண்ணை வைத்து அவர் யார்? என்பது குறித்து என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் வீட்டுக்கும் மிரட்டல்

அண்மை காலமாக திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், பள்ளிகள், பிரபலமான தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி விட்டது. சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

இதனைத் தொடர்ந்து சென்னை காவல் துறையினர் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. ஆகவே இது புரளி என்பது தெரியவந்தது. இப்படி தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை பிடிக்க காவல்துறை திணறி வருவதாக கூறப்படுகிறது. மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை பிடித்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!