தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வன்கொடுமை: என்சிஆர்பி அறிக்கையில் தகவல்!

By Manikanda PrabuFirst Published Dec 6, 2023, 11:52 AM IST
Highlights

தமிழ்நாட்டில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது என்சிஆர்பி 2022 ஆண்டறிக்கை மூலம் தெரியவந்துள்ளது

இந்தியா முழுவதும் நடைபெறும் குற்றங்கள் குறித்த ஆண்டறிக்கையை தேசிய குற்ற ஆவண மையம் (என்சிஆர்பி) ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதில் பெண்கள், குழந்தைகள், தலித்துகள் மீதான வன்முறைகள் குறித்து மாநிலவாரியான புள்ளி விவரங்கள் வெளியிடப்படுகின்றன.

அந்த வகையில், 2022ஆம் ஆண்டுக்கான என்சிஆர்பி ஆண்டறிக்கை வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டில் எஸ்சி மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் / வன்கொடுமைகளின் எண்ணிக்கை 1761 என குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2020இல் 1274 ஆகவும்; 2021ஆம் ஆண்டில் 1377 ஆகவும் இருந்தது. 

Latest Videos

மேலும், 2022 ஆம் ஆண்டில் 56 எஸ்சி சமூகத்தவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 168 எஸ்சி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதில் 18 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் 50 பேர், 18 வயதுக்கும் குறைவான சிறுமியர் 118 பேர் என என்சிஆர்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசோரம் முதல்வராக லால்துஹோமா நாளை மறுநாள் பதவியேற்பு!

இந்திய அளவில் எஸ்சி மக்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 57582 ஆக இருந்தது. இது 2020 ஆம் ஆண்டில் 50291 ஆகவும்; 2021 ஆம் ஆண்டில் 50900 ஆகவும் இருந்தது. எஸ்சி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் எண்ணிக்கை 2022 இல் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே எஸ்சி மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகம் நிகழும் முதல் மூன்று மாநிலங்கள் உத்தரப்பிரதேசம் (15368), ராஜஸ்தான் (8752), மத்தியபிரதேசம் ( 7733) ஆகும்.

இதுகுறித்து விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கூறுகையில், தமிழ்நாட்டில் எஸ்சி மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

click me!