வாடிக்கையாளர்கள் திடீரென முற்றுகை; தற்கொலைக்கு முயன்ற நிதி நிறுவன உரிமையாளர் ரத்த வெள்ளத்தில் மீட்பு

By Velmurugan s  |  First Published Dec 6, 2023, 11:25 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சீட்டு பணத்தை திரும்ப வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் கடையை முற்றுகையிட்டதால் நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் பின்புறம் வடமலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் தனபால். இவர் ஸ்ரீ குமரன் பைனான்ஸ் என்ற பெயரில் சீட்டு கட்டி ஏலம் விடும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்ப்பட்ட ஏராளமான பொதுமக்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையில் தவணை முறையில் சீட்டு கட்டி வந்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக சீட்டு கட்டியவர்களுக்கு பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சீட்டு கட்டிய நபர்கள் பணம் கேட்டும், பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சுமார் 100க்கும் வாடிக்கையாளர்கள் தனபாலுக்கு சொந்தமான குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்று நிறுவனத்தை பூட்டி உள்ளனர். பின்னர் அங்கிருந்து வந்த பொதுமக்கள் தனபால் நடத்திவரும் பைனான்ஸ் கடையின் முன்பு தனபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

என் காதலியை என்னுடன் சேர்த்து வையுங்கள்; நாகையில் பொதுமக்களை வெட்ட முயன்ற நபரால் பரபரப்பு

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் பொதுமக்கள் மற்றும் தனபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது தனபால் அனைவரையும் வெளியே தள்ளிவிட்டு கடையின் சட்டரை பூட்டிக்கொண்டு உள்ளே தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ந்து போன பொது மக்கள் கடையின் சட்டரை திறந்து பார்க்கும் பொழுது தனபால் கடையின் கண்ணாடியை உடைத்து கழுத்தில் வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பின்னர் கடையில் அனைத்து கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டார். இதில் தனபாலிற்கு கை மற்றும் உடலில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது. பின்னர் பக்கத்து கடைக்கு சென்று கண்ணாடி பாட்டிலை உடைத்து கழுத்தில் வைத்து தற்கொலைக்கு முயன்ற பொழுது பின்னால் இருந்த ஒரு நபர் அவரை லாவகமாக பிடித்து கீழே தள்ளினார். பின்னர் போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரது கைகளை அழுத்தி பிடித்து கடையின் முன்பு கொண்டு வந்தனர். 

பழனியில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்ட நடிகர் யோகிபாபு

பின்னர். ஆம்புலன்ஸ் மூலம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சீட்டு நடத்தும் கடையின் முன்பு பொதுமக்கள் சூழ்ந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!