ஓசூர், ஜோலார்பேட்டை இடையே விரைவில் ரயில் பாதை - மத்திய அமைச்சர் தகவல்

By Velmurugan s  |  First Published Nov 28, 2023, 10:04 AM IST

பெங்களூருவில் இருந்து ஓசூர், ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு புதிய ரயில் பாதை திட்டம் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், தமிழ்நாட்டின் ரயில்வே துறையின் முன்னேற்றத்தில் சாதனை மிக்க ஒதுக்கீடுகள் அமைந்துள்ளன. 2014ம் ஆண்டிற்கு முன்பு அதாவது 2009 முதல் 2014ம் ஆண்டு வரை இருந்த மத்திய அரசு, ரயில்வே துறையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டிற்கு என்று வெறும் 879 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. 

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் ரயில்வே துறைக்கு மட்டும் 6 ஆயிரத்து 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறார். முந்தைய அரசாங்கத்தை விட ஏழு மடங்கு அதிக நிதி தமிழ்நாட்டிற்கு ரயில்வே துறைக்கு மட்டும் ஒதுக்கீடு செய்திருக்கிறார். இரண்டாவதாக, தமிழ்நாட்டில் 75 ரயில் நிலையங்கள் கண்டறியப்பட்டு அவைகள் உலக தரத்திற்கு இணையாக மாற்றி அமைக்கப்பட உள்ளன.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மூன்றாவதாக, நீண்ட நாளாக காத்துக் கொண்டிருந்த ஓசூர் ஜோலார்பேட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம். இந்தத் திட்டம் குறித்து திரு நரசிம்மன் தொடர்ந்து என்னிடம் நிறைவேற்ற வலியுறுத்தி வந்தார். இவரைப்போல தொடர்ந்து திட்டத்தை நிறைவேற்ற மிகுந்த அக்கறையுடன் வலியுறுத்திய நபரை நான் சந்தித்ததே இல்லை. இந்த திட்டத்தைப் பொறுத்த வரையில் முதல் ஆய்வில் இந்த ரயில்வே பாதையில் மிக நீளமான சுரங்க பாதையை அமைப்பதில் ஏற்படும் அதிக செலவினம் காரணமாக சில சிக்கல்கள் இருந்தன. 

ஆனால் தற்பொழுது ரயில்வே துறை பொது மேலாளர் மற்றும் தென்னக ரயில்வே பொது மேலாளர் உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்து இதற்கான மிகவும் பயனுள்ள தீர்வை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே வெகு விரைவிலேயே இதற்கான தீர்வு ஏற்படும் என தெரிகிறது. இப்போது முதல் தொடர்ந்து நானும் இந்த திட்டம் குறித்து 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த குழுவினரை அணுகி முன்னேற்றம் குறித்து கேட்டு அறிவேன். இதன் காரணமாக விரைவாகவே இதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அமல்படுத்த முடியும். உங்களது நீண்ட நாள் தேவை மற்றும் வலியுறுத்தல் குறித்து நிச்சயம் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடி மனதில் மிகவும் நெருங்கிய தொடர்புடையது.

நள்ளிரவு பைக் பயணம்; தடுப்புச்சுவற்றில் மோதி கணவன், கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே பலி

2014 ஆம் ஆண்டிற்கு முன்பு சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் ரயில்வே துறையை ஒரு பால் சுரக்கும் பசுவாக நடத்தி வந்தனர். அவர்களுக்கு ரயில்வே துறையின் நலம் மற்றும் முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் இருந்ததே இல்லை. 2014 ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி இவை அனைத்தையும் மாற்றி அமைத்துள்ளார். 2014 ஆம் ஆண்டு ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு என்பது 34 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்பொழுது ஒதுக்கீடு என்பது 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அந்த ஓராண்டில் மட்டும் 5 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை காட்டிலும் அதிக அளவிலான முயற்சிகளை பிரதமர் மோடி ரயில்வே துறையின் முன்னேற்றத்திற்கு மட்டும் மேற்கொண்டு வருகிறார். ஆகவே இது போன்ற சிறிய முயற்சிகளால் நிச்சயமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் ஜோலார்பேட்டை புதிய ரயில்  பாதை திட்டம் மிகவும் முக்கியமானது மட்டுமல்லாது நிச்சயமாக வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டப்படும்.

தொடர் மழை எதிரொலி; மின் மாற்றியில் குடியேறிய மலைப்பாம்பு - வனத்துறையினர் துரித நடவடிக்கை

பெங்களூரு ஓசூர் இணைப்பு ரயில் பாதையை ஏற்கனவே கூடுதலாக இரண்டு வழி பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. இதனை நான்கு வழி பாதையாக மாற்றுவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறித்து ஏற்கனவே குழுவினரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருக்கு தொடர் இணைப்பு கிடைக்கும். அதேபோல, ஓசூரில் இருந்து சேலம் அதாவது ஓமலூர் ரயில்வே நிலையம் வரை உள்ள பாதையை மிகவும் முக்கியமானது என்பதால் அதனை இரு வழி பாதையாக மாற்றுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. 

மேலும் ஓசூர் பகுதியில் பல்முனை ரயில்வே சரக்கு முனையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், தொழிற்சாலைகளுக்கு மிகவும் பயனளிக்கும் சரக்கு போக்குவரத்தும் அதனால் தொழில் முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்பு பெருகும் என்பது நிச்சயம். இதற்கான தொடர் பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிச்சயமாக நல்ல முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படும். 

இதைத்தொடர்ந்து ஓசூர் ரயில் நிலையத்தை உலக தரத்திற்கு இணையாக மாற்றியமைக்கப்படுவது குறித்ததான மாதிரி படத்தை அமைச்சர் செய்தியாளர்களிடம் காட்டினார். மேலும் இதில் ஏதாவது மாற்றங்களோ அல்லது புதிய வழிகளையோ மக்கள் ரயில்வே துறைக்கு வெளிப்படையாக தெரிவித்து ஆலோசனை வழங்கலாம் என கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

click me!