தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் கடந்த ஜனவரி தொடக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த விடுமுறை நாட்கள் குறிப்பில் செப்டம்பர் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது தவறு என்று சுட்டிக்காட்டிய இந்து அமைப்புகள் செப்டம்பர் 18ம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி. தமிழக அரசு அதனை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
மேலும் இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழக அரசின் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரியில் வெளிவந்தபோதே, விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 17ம் தேதி ஞாயிற்று கிழமை என்று இருந்ததை உடனே சுட்டிக்காட்டி திருத்தம் வெளியிட கேட்டோம். ஆனால், தற்போது வரை நடவடிக்கை இல்லை.
திமுக தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்பதற்கு 7 பேர் விடுதலையே சாட்டி - ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்
கிறிஸ்தவ, இஸ்லாமிய பண்டிகைகளை அந்த மதத்தலைவர்களை ஆலோசித்து அறிவிக்கும் தமிழக அரசு, இந்துக்களின் பண்டிககைகள் பற்றிய விவரத்தை தன்னிச்சையாக அறிவிக்கிறது. தமிழகத்தில் 88 சதவீதம் உள்ள இந்துகள் அனைவரும் கொண்டாடி மகிழும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தவறான தேதியில் அறிவித்ததை தமிழக அரசு திருத்தி அரசாணை வெளியிடாததை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
அடியாட்களை வரவைத்து தனியார் பேருந்து நடத்துநரை புரட்டி எடுத்த இளைஞர்; கும்பகோணத்தில் பரபரப்பு
தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி பண்டிகை அரசு விடுமுறையை செப்டம்பர் 18ம் தேதி என உடனடியாக அரசாணை வெளியிடாவிட்டால் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், செப்டம்பர் 17 என்பதை மாற்றம் செய்து செப்டம்பர் 18 திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி என்று மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.