எங்க சாவுக்கு யாரும் காரணமில்லை.. அக்கா, தம்பி தூக்கிட்டு தற்கொலை..கடிதத்தில் உருக்கம்..

Published : Feb 13, 2022, 10:03 PM IST
எங்க சாவுக்கு யாரும் காரணமில்லை.. அக்கா, தம்பி தூக்கிட்டு தற்கொலை..கடிதத்தில் உருக்கம்..

சுருக்கம்

விழுப்புரத்தில் வறுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட அக்கா ,தம்பி ஆகியோரது உடல்கள் 5 நாள் ஆன நிலையில் மீட்கப்பட்டுள்ளது.   

விழுப்புரத்தில் வறுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட அக்கா ,தம்பி ஆகியோரது உடல்கள் 5 நாள் ஆன நிலையில் மீட்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கே.கே சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பிரமிளா(52), சுசீந்திரன்(50) ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். மேலும் அக்கா தம்பியான இவர் இரண்டு பேரும், சினிமா துணை நடிகை ஆக இருக்கும் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு, சினிமா படப்பிடிப்பு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றினால் இவர்களுக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்ததாகவும் தூர்நாற்றம் வீசயதால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  வீட்டை உடைத்து உள்ளே பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்றும் கிடைந்துள்ளது. நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு கைப்பற்றப்பட்ட கடிதத்தில், எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை. வறுமை காரணமாகவே தாங்கள் தற்கொலை முடிவை எடுத்துள்ளோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!