#Breaking: அதிர்ச்சி... லீக்கானது 10, 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்... தி.மலையில் பரபரப்பு!!

Published : Feb 13, 2022, 09:11 PM IST
#Breaking: அதிர்ச்சி... லீக்கானது 10, 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்... தி.மலையில் பரபரப்பு!!

சுருக்கம்

10,12 ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன் கூட்டியே சமூக வலைதளங்களில் லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

10,12 ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன் கூட்டியே சமூக வலைதளங்களில் லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்புதல் தேர்விற்கான கேள்வித்தாள்கள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானதாக புகார் கூறப்பட்டுள்ளது.

வினாத்தாள் லீக் ஆனதால் ஒட்டு மொத்த மாணவர்களும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் கூறி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு லீக் ஆனதாக கூறப்படுகிறது. நாளை 12 ஆம் வகுப்பு கணித பாடத்திற்கான தேர்வு நடைபெற இருந்தது.

இந்நிலையில் மேற்கண்ட பாடத்திற்கான வினாத்தாள் மற்றும் 10 ஆம் வகுப்பிற்கான அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள் உள்ளிட்டவை லீக் ஆனதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில் வினாத்தாள் லீக் அவுட் ஆனது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?