மேலேயிருந்து கொட்டின மழைத் தண்ணி கூட கறுப்பா இருக்குது... பீதியடைந்த பொதுமக்கள்!

First Published Dec 5, 2017, 2:16 PM IST
Highlights
villagers afraid over rain water on black in colour


வடகிழக்குப் பருவ மழகைக்காலமான இப்போது, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களிலும் கனத்த மழை பெய்துவருகிறது. மழை நீர் நிலத்தில் விழுந்து, நிலத்தின் தன்மையைப் பெற்று அந்த வண்ணத்தில் வெள்ளமாகச் செல்லும். வெள்ள நீர் வடிய வடிய பல இடங்களில் சகதியாக மாறி நிலம் சதுப்பு நிலம்போல் மாறிவிடுகிறது. 

நிலத்தின் தன்மைக்கேற்ப மழை நீர் மாறுவது போல், இப்போது வானின் காற்றுத் தன்மைக்கேற்ப மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.  நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே வானத்தில் இருந்து கொட்டிய மழை நீரே கறுப்பாக இருந்ததால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கடலோர கிராமங்களில்ம் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மழைக் காலங்களில் மழை நீரை பாத்திரங்களில் பிடித்து சேமித்து வைத்து, அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது இந்தப் பகுதி மக்களின் வழக்கமாக உள்ளது. 

இப்படித்தா, சீர்காழி  அருகே உள்ள பழையாறு கிராம மக்கள், அண்மையில் பெய்த மழைநீரை வழக்கம்போல்  வாளி, கேன்கள், பாத்திரங்களில் பிடித்து வைத்தனர். ஆனால், பாத்திரங்களில் சேகரமான தண்ணீரைப் பார்த்த போது, அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. பிடித்து வைத்த  தண்ணீர் கருப்பாக இருந்ததுதான் அதிர்ச்சிக்கு காரணம். 

சரி ஏதோ மேற்கூரையில் இருக்கும் அழுகுகள் சேர்ந்திருக்கலாமோ என்ற எண்ணத்தில் வெட்டவெளியில் பாத்திரங்களை வைத்து, மழை நீரை அதில் பிடித்துப் பார்த்தனர். ஆனால் அந்த மழை நீரும் கறுப்பு நிறமாக இருந்தது. இந்தத் தகவலால் மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது. 

பழையாறு பகுதி மட்டுமல்லாது, சுற்றுப் புறங்களில் உள்ள ஐந்து கிராமங்களிலும் மழை நீர் கருப்பாக இருந்தது.  இது அப்பகுதி மக்களிடையே பீதியை  ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளனர். அதிகாரிகளும் வந்து பார்த்து, ஆராய்ந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறிய போது, 'கடலில் புயல் உருவாகும்போது, காற்றில் உள்ள மாசுத் துகள்கள் மழை நீரில் கலந்து, தண்ணீர் கறுப்பாகி இருக்கலாம் என்று கூறீனார். 

ஆனால், கடலோரப் பகுதிகளில் உள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேரும் புகையின் அடர்ந்த கருந்துகள்கள் மழை நீருடன் கலந்து வந்திருக்கலாம்  என்று கூறப்படுகிறது. 

எப்படி இருந்தாலும், மழை நீர் மிகவும் தூய்மையானது என்றுதான் இதுவரை படித்து பார்த்து வந்திருக்கிறோம். ஆனால், மழை நீரே கறுப்பாக வந்தால் அதிர்ச்சி இருக்கத்தானே செய்யும்!

click me!