தானா சேர்ந்த கூட்டம்... மெர்சலாகி கலக்கிடுச்சி... 2017ன் உச்சபட்ச #தமிழண்டா டிவிட் எது தெரியுமா?

First Published Dec 5, 2017, 1:41 PM IST
Highlights
movie Mersel and Baahubali 2 trended pan India the Twitter official said


சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் அடுத்து மிகவும் பிரபலமாக உள்ளது டிவிட்டர் பதிவுகள்தான். பலருக்கும் டிவிட்டரில் கணக்குகள் உள்ளன. அவற்றின் மூலம் பல பிரச்னைகளை விவாதிக்கிறார்கள். 

டிவிட்டர் நிறுவன இந்தியா பிரிவின் இயக்குனரான தரண்ஜீத் சிங், 2017ல் டிவிட்டரில் பாப்புலரான ஹேஷ்டேக், டிவிட்டர் செயல்பாடுகள் ஆகியன குறித்து தகவல்களை வெளியிட்டார். அப்போது, தமிழில் வெளியான மெர்சலும், தானா சேர்ந்த கூட்டம் செகண்ட் லுக் டிவிட்டும் அதிகமானவர்களால் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார் தரண்ஜீத் சிங். 

அவர் டிவிட்டரில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள் குறித்த விவரத்தை வெளியிட்டார்.  மிகவும் ஆச்சரியகரமாக  தென்னிந்திய திரைப்படங்கள் அதிகம் கவனம் பெற்றிருக்கின்றன. டிவிட்டரில் டாப் லிஸ்டில் இடம் பெற்றது தமிழ் திரைப்படமான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் செகண்ட் லுக் மற்றும் சூரியா சிவகுமாரின் இந்த டிவிட்தான்!  

மெர்சல் படம் குறித்த டிவிட் தகவலைப் பகிர்ந்தார் தரண்ஜீத் சிங். தென்னிந்தியப் படங்கள் குறிப்பாக தமிழ்ப் படங்கள் டிவிட்டரில் அதிகம் விவாதிக்கப்பட்டனவாம். மெர்சல் படம் பற்றிய ஹேஷ்டேக், பாகுபலி 2 படம் குறித்த ஹாஷ்டாக்  ஆகியவை டிவிட்டரில் செம பாப்புலராக ஓடியிருக்கின்றன. மெர்சல் மட்டுமே 17 லட்சம் டிவிட்களாக அதுவும் 3 நாட்களில் பாப்புலராக ஓடியிருக்கிறது. இந்த வருடத்தில் டாப் ட்ரெண்ட் ஆக ஓடிய டிவிட் இதுதானாம். 

மெர்சல் படமும், ஜிஎஸ்டி சர்ச்சையுமாக சேர்ந்து டிவிட்டரில் அதிகம் விகாதிக்கப்பட்ட டிவிட் தலைப்பாக அது மாறிவிட்டது. 

அது போல் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு குறித்த தகவல் இந்த வருடத்தின் துவக்கத்தில் உச்ச பட்ச விவாதப் பொருளாக தேசிய அளவில் எதிரொலித்துள்ளது. ஜஸ்டிஸ் பார் ஜல்லிக்கட்டு என்ற ஹாஷ்டாக் தான் டிவிட்டரின் இந்த வருட ஆரம்பத்தின் ட்ரெண்ட் செட்டர் ஹாஷ்டாக்! ஆக, #தமிழண்டா என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சொல்லும் வகையில் திகழ்ந்தது இந்த ஜல்லிக்கட்டு விஷயம்!

click me!