
நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பு தேதியான வரும் டிசம்பர் 21ஆம் தேதி தான் ஆர்.கே நகர் இடைதேர்தலும் நடைபெற உள்ளது
தமிழகமே ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கும் ஆர்.கே நகர் தேர்தலும், 2ஜி தீர்ப்பு தேதியும் ஒரே நாளில் வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.கே நகர் தேர்தல்
அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவி வரும் தருணத்தில்,இத்தேர்தலில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்கிறது. அதேநேரத்தில் ஜெயலலிதா இல்லாத சூழலில் வலிமையான தலைமை அதிமுகவுக்கு இல்லாத நிலையில் திமுக வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி
இந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் அதே டிசம்பர் 21-ந் தேதியன்றுதான் இந்தியாவையே அதிர வைக்கப் போகும் ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பையும் அளிக்கப் போவதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் 2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருப்படுகின்றனர்.
தகுதியற்ற நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு 2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சில ஆண்டுகளாகவே இழுப்பறியில் இருந்து வந்த இந்த வழக்கு டிசம்பர் 21ஆம் தேதியில் முடிவுக்கு வரஉள்ளது
டிசம்பர் 21 தேதி வெளியாகும் தீர்ப்பு உண்மையில் திமுக விற்கு ஆனந்தத்தை கொடுக்குமா ...அதிர்ச்சியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதே வேளையில், ஆர்.கே நகர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் அதனுடைய கொண்டாட்டம் 2ஜி தீர்ப்பை பொறுத்தே பிரதிபலிக்கும் என்பதில் மாற்றமும் இல்லை