Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி.!

By vinoth kumar  |  First Published Jun 14, 2024, 1:44 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. 


தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பை  வெளியிட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. ஜூலை 13ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி அறிவித்து விட்டது. அதிமுக வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய ஜனநாய கூட்டணி சார்பாக பாஜக போட்டியிடுமா? அல்லது பாமக போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதுவரை இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில் இருந்து விலகி இருந்த பாமகவை இந்த முறை விக்கிரவாண்டி தொகுதியில் களமிறக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக அன்புமணி பாமக நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை ஈடுபட்டார். 

இதையும் படிங்க: சொந்த மாவட்டத்தில் சி.வி. சண்முகத்தின் இமேஜை டேமேஜ் செய்ய வெயிட்டான வேட்பாளரை களம் இறக்கும் பாமக!

இந்நிலையில், தேசிய ஜனநாயக  கூட்டணி சார்பாக பாமக போட்டியிடும் என அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ம் தேதி அன்று நடைபெற உள்ளது. 

இதையும் படிங்க:  Vijayaprabhakaran: விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை; கைவிரித்த தேர்தல் ஆணையம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைத்து பாடுபடுவோம்! வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார். 

click me!