விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் 2024ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பிரதான எதிர்கட்சியான அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதையும் படிங்க: கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரி வெட்டிப் படுகொலை! யார் இந்த ஜாகீர் உசேன்?
இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,688 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் அன்புமணி 56,248 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,520 வாக்குகள் பெற்றனர். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சுமார் 67,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அன்னியூர் சிவா வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் ராஜமாணிக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தான் வேட்பு மனுத்தாக்கல் செய்ததாகவும் முறையாக பரிசீலிக்காமல் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். எனவே இந்த இடைத்தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்றும் கோரியிருந்தார். இதனிடையே, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி அன்னியூர் சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: விடுமுறை அறிவிப்பு வந்தாச்சு! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அன்னியூர் சிவாவின் மனுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் ராஜமாணிக்கம் தாக்கம் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.