சென்னையில் இரட்டை கொலை: கொலையாளிகளை சேலத்தில் சுற்றி வளைத்த போலீஸ்

Published : Mar 18, 2025, 11:13 AM IST
சென்னையில் இரட்டை கொலை: கொலையாளிகளை சேலத்தில் சுற்றி வளைத்த போலீஸ்

சுருக்கம்

சென்னையில் ரவுடி படப்பை சுரேஷ் மற்றும் அருண் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். காதலி கொலைக்கு பழிவாங்க திட்டமிட்டதால் இந்த இரட்டை கொலை நடந்துள்ளது. கொலையாளிகள் சேலத்தில் கைது செய்யப்பட்டனர்.

Chennai double murder : தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல இடங்களில அடுத்தடுத்து கொலைகள் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு சென்னை கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள நாகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி படப்பை சுரேஷ் மற்றும் கோட்டூர்புரத்தை சேர்ந்த அருண் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். 

சென்னையில் 2 ரவுடிகள் கோயில் வளாகத்தில் துடிக்க துடிக்க வெட்டிக்கொலை.! வெளியான ஷாக் தகவல்

சென்னையில் இரட்டை கொலை

இந்த கொலை தொடர்பாக போலீசாரின் விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அருண் என்பவரது காதலி சாயின்ஷாவை ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து  சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய அருண் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டமிட்டுள்ளனர். இதனையறிந்த சுக்கு காபி சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் அருண் மற்றும் படப்பை சுரேஷ்யை வெட்டி படுகொலை  கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய கோட்டூர்புரத்தை சேர்ந்த ரவுடி சுக்கு காபி சுரேஷ் உள்ளிட்ட 8  பேரை கோட்டூர்புரம் போலீசார் தேடி வந்தனர்.

ரவுடிகளை ஒழிப்பதால் காழ்ப்புணர்ச்சி! காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது! ஐகோர்ட்!

கொலையாளிகள் 8 பேர் கைது

இவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு கார் மூலம் சேலம் தப்பி சென்றதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து தேடி வந்த தனிப்படை போலீசார் சேலத்தில் மறைந்திருந்த சுக்கு காபி சுரேஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தது. இதனையடுத்து கொலையாளிகளை சென்னைக்கு அழைத்து வந்து  ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கட்டம் கட்டும் திமுக..? ஸ்டாலினுக்காக களம் இறங்கும் இந்தியா கூட்டணி
வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!