Tamil Nadu Power Shutdown on 18-03-2025 : தமிழகத்தில் நாளை 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒரு சில பகுதிகளில் மின்தடை இருக்கும் பகுதிகள் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Power outage in Tamil Nadu tomorrow! In which places will there be a full-time power cut? : கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் மின் பயன்பாட்டின் அளவு அதிகரித்துள்ளஹ்டு. ஏசி, ஃபேன் உள்ளிட்ட மின் சாதங்களின் பயன்பாடும் அதிகரிக்கும். மேலும், மின் தேவையும் அதிகளவில் ஏற்படும். அதிலேயும் அக்னி நட்சத்திரம் வரும் மே 4 ஆம் தேதி 28ஆம் தேதி வரையில் நீடிக்கும். இன்னும், அக்னி நட்சத்திரம் தொடங்காத நிலையில் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் மாதாந்திர பராபரிப்பு பணிகள் காரணமாக காலை முதல் மாலை வரை மின்தடை ஏற்படும்.
கோடை காலங்களில் மின்தடை இருக்க கூடாது என தமிழக மின் வாரியம் சார்பாக பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல முறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தி கூடுதல் மின் உற்பத்தி திட்டங்களும், தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்காகவும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு தற்போது தொடங்கியுள்ளது.
எனவே மின் தடை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில்; பள்ளி மாணவர்களுக்கான சிபிஎஸ்இ, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, அனைத்து தேர்வு மையங்களிலும் நாள்தோறும் காலை 7 முதல் மாலை 5.30 வரை தடையற்ற வகையில் மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்கள் காரணமாக மாதந்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் நாளை 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னையில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரையில் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற்பகல் 2 மணிக்கு பிறகு பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு வழக்கம் போல் மின் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில், ரெட்டில்ஸ் பகுதியில் தர்காஸ் சாலி, கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகர், சென்றம்பாக்கம், ஸ்ரீ பால விநாயகர் நகர், புது நகர் 3ஆவது தெரு மற்றும் 5ஆவது தெரு, மல்லிமநகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.