தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தீயை அணைக்க 12 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்.
Massive fire at Thoothukudi thermal power plant: Loss of Rs. 50 crore : கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மின்விசிறி, ஏசி போன்றவைகள் இல்லாமல் ஒரு நிமிடம் கூட தாக்கு பிடிக்க முடியாத வகையில் வெயில் கொளுத்துகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் சுமார் 630 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் மொத்தமாக 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு அனல் மின் நிலையத்தில் உள்ள குளிரூட்டும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
இதனால் ஏற்பட்ட தீயானது வேகமாக பரவ தொடங்கியது. ஒரு கட்டத்தில் மின்சார ஒயர்கள் மூலம் பரவிய தீயானது அனல்மின் நிலையத்தின் 1 மற்றும் 2-வது மற்றும் 3 அலகுகளுக்கு தீ பிடித்துக்கொண்டது. இதனால் மின்சாரம் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. தீ விபத்து தொடர்பாக வந்த தகவலையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர். 500 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகே தீ கட்டுப்படுத்தப்பட்டது. இருந்த போதும் பல இடங்களில் உள்ள மின் ஒயர்களில் தீயானது விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனையடுத் தீயணைப்பு துறையினர் பல கட்ட போராட்டங்களுக்கு மத்தியில் அனைத்தனர்.
போராடி தீயை அணைந்த வீரர்கள்
இந்த தீ விபத்தின் காரணமாக சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலுமாக எரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் தீவிபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், தீயாணது முழுமையாக அனைக்கப்பட்டுள்ளதாகவும், தீயணைப்பு வீரர்கள் புகையின் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும் தற்போது நலமாக இருப்பதாக கூறினார்.