திருச்செந்தூர் கோயிலில் பக்தர் உயிரிழப்பு - அமைச்சர் சேகர் பாபு புது விளக்கம்!!

திருச்செந்தூர் கோயிலில் பக்தர் மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். உயிரிழந்த பக்தர் மூச்சுத்திணறல் நோயால் அவதிப்பட்டு வந்ததாக அவரது மனைவி கடிதம் எழுதியுள்ளார்.


Tiruchendur temple death : ஆறுபடை வீடுகளில் ஒன்றான  திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினந்தோறும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிக்க திருச்செந்தூருக்கு வருகை தருவது வழக்கம். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஓம்குமார் என்பவர் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது முச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருச்செந்தூர் கோயிலில் உரிய வசதிகள் இல்லையென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். 

Latest Videos

திருச்செந்தூர் கோயில் உயிரிழப்பு

இதற்கு பதில் அளிக்கும் வகையில்  அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நேற்று  (16.3.2025) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவரது மரணமானது கூட்ட நெரிசலால் ஏற்படவில்லை. அவர் மூச்சுத்திணறல் நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளதாக அவருடைய மனைவி மலர்விழி  தனது கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார். மூத்த குடிமக்கள் வரிசையில் தான் அவர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ள நிலையில், அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தான் உயிரிழந்துள்ளார். உண்மைச் செய்தியை அறியாமல்  உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்கு   அழகல்ல. கிடைக்கப் பெறுகின்ற தகவல்களை எல்லாம் வலைதளங்களில் பதிவிடுவது ஏற்புடையதுமல்ல என சேகர்பாபு தெரிவித்துள்ளார்,

கூட்ட நெரிசலால் உயிரிழப்பா.?

இதனிடையே ஓம்கார் மனைவி மலர் விழி காவல்நிலையத்தில் எழுதிக்கொடுத்துள்ள கடிதத்தில். நானும் எனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தோம். நேற்று (16.03. 2025) தேதி மதியம் 12 மணிக்கு எனது மகள் குழந்தைக்கு மொட்டை போட்டு முடித்து சாமி கும்பிடுவதற்காக 100 ரூபாய் வரிசை மற்றும் சீனியர் சிட்டிசன் வரிசையில் குடும்பத்தினர் தனித்தனியாக சென்றோம்.
நானும் எனது கணவரும் எனது மகனும் 100 ரூபாய்  வரிசையில் சென்று கொன்டிருக்கும் போது எனது மகள் குழந்தையின் பால் புட்டியை எனது மகளிடம் கொடுப்பதற்காக எனது கணவர் சென்று கொடுத்துவிட்டு மறுபடியும் 100 ரூபாய் வரிசையில் எங்களுக்கு பின்னால் சுமார் 100 அடி பின் வரிசையில் வந்து கொண்டிருந்தார்.

இன்று (16.3.2025) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காரைக்குடியைச் சேர்ந்த திரு.ஓம்குமார் என்பவரது மரணமானது கூட்ட நெரிசலால் ஏற்படவில்லை. அவர் மூச்சுத்திணறல் நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளதாக அவருடைய மனைவி திருமதி.மலர்விழி அவர்கள் இத்துடன் (1/3) pic.twitter.com/A6xUx2F9rn

— P.K. Sekar Babu (@PKSekarbabu)

 

 இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை

தாங்கள் 100 ரூபாய் வரிசையில் முன்னால் சாமி கும்பிட சென்றதால் எனது கணவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. தெரியவில்லை. கோவில் வெளியே வத்து விசாரிக்கும் போது ஒரு நபர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கேள்விப்பட்டோம் . நாங்கள் சந்தேகபட்டு மருத்துவமனைக்கு சென்றுபார்த்த போது எனது கணவர் இறந்ததை தெரிந்து கொண்டேன். எனது கணவருக்கு அடிக்கடி முச்சுதிணறல் வருவதுண்டு. எனவே எனது கணவர் இறப்பில் எந்தவித சந்தேகமும் இல்லையென அந்த கடிதத்தில் கூறியுள்ளார். 

click me!