வசமாக சிக்கிய திமுக நகராட்சித் தலைவர் மகன்! கையாலாகாத அரசு! இறங்கி அடிக்கும் அண்ணாமலை!

Coimbatore Mineral Smuggling: கோயம்புத்தூரில் திமுக பிரமுகர் மகன் கனிமவளக் கடத்தலில் ஈடுபட்டதாக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அனுமதியின்றி கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தியதாக, கோயம்புத்தூர் மதுக்கரை திமுக நகராட்சித் தலைவர் நூர்ஜகான் அவர்களது மகன் ஷாரூக்கான் என்பவருக்குச் சொந்தமான இரண்டு டாரஸ் லாரிகள், கோயம்புத்தூர் மாவட்ட கனிம வளத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா? வேளாண் பட்ஜெட் பெயரில் பொய் புரட்டு! அண்ணாமலை!

Latest Videos

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்படும் இந்தக் கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோவதோடு, தமிழக மக்களுக்குத் தேவைப்படும் கட்டிடப் பொருள்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பாஜக மாவட்ட தலைவர் மீது பாய்ந்த குண்டாஸ்.! அண்ணாமலைக்கு ஷாக்

திமுகவினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், திமுக அரசு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது இரண்டு மட்டுமே. கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத திமுக அரசு? என அண்ணாமலை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!