அதிமுக பலவீனமாகி வருவதாகவும், தொண்டர்கள் ஒன்றுபட விரும்புவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதாகவும், 2026 தேர்தலில் திமுக தோல்வியடையும் என்றும் அவர் கூறினார்.
புதுக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: அதிமுக பலவீனமாகி வருகிறது. 90 சதவீத தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிமுக பலம் பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்களின் குரலாக தான் செங்கோட்டையன் இருப்பதாக பார்க்கிறேன். செங்கோட்டையனுக்கு நாகரீகம் அநாகரீகம் என்று சொல்லி கொடுக்க வேண்டியதில்லை. அவர் எந்தவித சர்சையிலும் சிக்காதவர்.
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து அதிமுகவில் உள்ளார். நாகரீகம் அநாகரீகம் எல்லாம் செங்கோட்டையனுக்கு யாரும் சொல்லி கொடுக்க வேண்டியதில்லை, ஆட்சி துரோகம், நான்கரை ஆண்டு காலம் ஆட்சியை காப்பாத்தி கொடுத்தவர்களுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. திமுக மீது மக்களிடையே பெரும் குற்றாச்சாட்டு உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆட்சியை எதிர்க்கின்றனர். விளம்பர ஆட்சி திமுக நடத்துகிறது. டெல்லியை போல் தமிழகத்திலும் டாஸ்மாக் ஊழல் நடந்துள்ளது.
சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை நிச்சயம் சந்தித்து பேசி இருக்கலாம். அவர்கள் சந்திப்பு நடக்கவே இல்லை என்று எப்படி சொல்ல முடியும். டெல்லியில் மதுபான ஊழல் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தி கூட்டணி உள்ளவர்கள் பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்று தான் கூறினார்கள். ஆனால் மூன்று தேர்தலில் வெற்றி வாய்ப்பைத் தந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்த தேர்தலில் டெல்லி மக்கள் மதுபான கொள்கை முறை எடுத்து தொடர்பாக சரியான பாடத்தை புகட்டி தோல்வி அடையச் செய்தனர்.
அது போன்று தான் தமிழகத்திலும் தற்போது டாஸ்மார்க் ஊழல் தொடர்பாக பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுகின்றனர். ஆனால் 2026 தேர்தலில் திமுக டெல்லியில் எப்படி ஆம் ஆத்மி தோற்றதோ அதுபோன்று திமுக தோற்கும். எடப்பாடி பழனிச்சாமி தன் மேல் உள்ள வழக்குகளுக்காக இரட்டை இலையை வைத்துக்கொண்டு திமுகவிற்கு வெற்றிக்கு உதவி செய்து வருகிறார். பழனிச்சாமி பேசுவதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது அனைத்து டயலாக்கையும் அவர் பேசுவார். அதிமுகவை வளர்த்து ஆளாக்கிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை அத்திக்கடவு அவிநாசி திட்டம் பாராட்டு விழாவில் எடப்பாடி பழனிச்சாமி போடாதது தான் செங்கோட்டையனுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது இதை செங்கோட்டையனே தூண்டி விடுவதற்காக நான் கூறவில்லை. இது அனைவருக்கும் வருத்தத்தை தான் கொடுத்தது.
சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்திக்கிறது நான்கு வயது சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பில்லை எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை போதைப் பொருட்கள் கலங்காமல் விற்பனை நடைபெறுகிறது. இதனை மறைப்பதற்காக திசை திருப்புவதற்காக தான் ரூபாய் சின்னத்தை மாற்றியது முன்மொழிக் கொள்கை வெளியிட்ட பல்வேறு தேவையில்லாத பிரச்சனைகளை எழுப்பி பிரச்சனைகளை திசை திருப்பி வருகிறார். ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும் என்றால் அதிமுக ஒன்று பட வேண்டும். அதை அதிமுகவில் உள்ள 90 சதவீத நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்புகின்றனர். இனியாவது தொண்டர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்து திமுகவை எதிர்க்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் வைதிலிங்கத்தை ஏற்கனவே சந்திக்க வேண்டும் என்றான் திட்டமிட்டு இருந்தேன் அதன்படி சந்தித்தேன் நான் சந்தித்து விட்டு வந்த பிறகு எனது சித்தி சசிகலாவும் சந்தித்து விட்டு வந்துள்ளனர். திமுக கூட்டணிகை உடைத்து பணபலம் ஆட்சி பலம் அதிகார பலம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றி பெறலாம் என்று நினைத்துக் கொண்டுள்ள தீய சக்தி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் திமுக தோற்கடிக்க வேண்டிய கட்சி என்று நினைக்கும் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அது தேசிய ஜனநாயக கூட்டணியாக இருக்க வேண்டும்.
அதிமுக அனைத்து தரப்பும் ஒன்றுபட்டு வந்தால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க டிடிவி தினகரன் பழனிச்சாமியை போல நான் பிடிவாதக்காரங்களை அது தேவைப்பட்டால் அந்த நேரத்தில் கட்சி தொண்டர்களின் எண்ணங்களை கேட்டு அறிந்து அதற்குண்டான நடவடிக்கையை நான் எடுப்பேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.