திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிர்ச்சி! பக்தர் உயிரிழப்பு! நடந்தது என்ன?

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்  மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். 


ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடு திருப்பரங்குன்றம், 2வது படை வீடு திருச்செந்தூர், 3வது படை வீடு பழநி,  4வது படை வீடு சுவாமிமலை, 5வது படை வீடு திருத்தணி, 6வது படை வீடு பழமுதிர்சோலை ஆகியவைகள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கு ஒவ்வொரு சிறப்பு உண்டு. 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த கோவில் உலக பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிக்க திருச்செந்தூருக்கு வருகை தருவது வழக்கம். அதுவும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். 

Latest Videos

இதையும் படிங்க: பொதுமக்களே தப்பி தவறி கூட வெளியே போயிடாதீங்க! வார்னிங் கொடுத்த கையோடு ட்விஸ்ட் வைத்த வானிலை மையம்!

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஓம்குமார் என்பவர் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்துள்ளார். 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தார். 

இதையும் படிங்க: பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சூப்பர் செய்தி! அரியர் க்ளியர் பண்ண அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

அப்போது திடீரென மூச்சுத்திணறல் எற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக பக்தர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்  திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திருச்செந்தூர் பக்தர்களுக்கு இடையே சோகத்தை எற்படுத்தியுள்ளது.

click me!