டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையில் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது. அண்ணாமலை தலைமையில் பாஜக போராட்டம் அறிவித்த நிலையில், போலீசார் குவிப்பு, தலைவர்கள் கைது.
TASMAC scam Tamil Nadu BJP Protest : டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அதன் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இந்த மேலும் இந்த சோதனையின்போது, பணியிடமாற்றம், போக்குவரத்து டெண்டர், பார் உரிமம் டெண்டர், சில மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமான ஆர்டர்கள், பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 அதிகமாக வசூலித்தது போன்ற குற்றங்களுக்கான தரவுகள் கிடைத்தாகவும்,
டாஸ்மாக் மோசடி - அமலாக்கத்துறை சோதனை
SNJ, Kals, Accord, SAIFL, சிவா டிஸ்டில்லரி ஆகிய மதுபான நிறுவனங்கள், தேவி பாட்டில்கள், கிரிஸ்டல் பாட்டில்கள் மற்றும் GLR ஹோல்டிங் போன்றவற்றுடன் பெரிய அளவிலான நிதி மோசடிகள், கணக்கில் காட்டப்படாத பணப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பது சோதனையில் தெரியவந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்படதாகவும் கூறப்பட்டது.
பாஜக போராட்டம் அறிவிப்பு
இதனையடுத்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தார். அதன் படி, சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அதற்கு தான் தலைமை ஏற்க இருப்பாதவும் கூறியிருந்தார். இந்த நிலையில் போராடத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் தடுக்கும் பொருட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்து சென்னையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட பாஜகவினர் வீட்டுக்காவலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பாஜக தலைவர்கள் கைது
இதே போல சென்னையில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசையும் போராட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்ட நிலையில் வீட்டில் இருந்து வெளியே செல்லாத படி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாஜக இளைஞர் அணி நிர்வாகி வினோஜ் பி செல்வமும் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.