
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு இன்று நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரம்ஜானை முன்னிட்டு அந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம்.
மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் அரசியல் தலைவர்களும் தங்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நாளை அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை வர்த்தக மையத்தில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேமுதிக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.