விக்ரவாண்டியில் த.வெ.க மாநாடு; திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!

Ansgar R |  
Published : Oct 26, 2024, 10:25 PM IST
விக்ரவாண்டியில் த.வெ.க மாநாடு; திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!

சுருக்கம்

Thalapathy Vijay Maanadu : நாளை மிக பிரம்மாண்டமாக தளபதி விஜயின் த.வெ.க கட்சி மாநாடு பல லட்சம் மக்கள் மத்தியில் நடைபெறவுள்ளது.

தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழுமையாக இப்பொழுது முடிவடைந்துள்ள நிலையில், கண்கவர் விளக்குகளால் அந்த இடமே இரவை பகலாக்கும் வண்ணம் ஜொலித்து வருகின்றது என்றே கூறலாம். இன்று இரவு மாநாட்டு பந்தலை தளபதி விஜய் பார்வையிட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. 

நாளை மாலை பல லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் தனது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாட்டை தளபதி விஜய் நடித்தவுள்ளார். மேலும் மாநாட்டிற்கு பங்கேற்க வருபவர்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக செல்பி ஸ்டிக்ஸ், மது, பிற போதை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு மாநாட்டு பந்தலுக்குள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மாநாட்டிற்கு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர், மிச்சர் பாக்கெட், குளுக்கோஸ் பாக்கெட் மற்றும் பிஸ்கட் ஆகியவைகள் அடங்கிய ஒரு பொதியும் கொடுக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Velliangiri Hills: வெள்ளியங்கிரி மலையேற ரூ.5,099 ரூபாய் கட்டணமா? உண்மை என்ன? அரசு கொடுத்த விளக்கம்!

மாநாடு நடக்க உள்ள விக்கிரவாண்டி வி. சாலையில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். இவை எல்லாம் ஒருபுறம் இருக்க திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த மாநாடு நடைபெறுவதால், தீபாவளி பண்டிகையும் நெருங்கி வரும் காரணத்தால், நாளை ஒரு நாள் தளபதி விஜயின் மாநாடு நடக்க உள்ள இடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. 

இதனால் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி புறப்படும் வாகனங்கள் திண்டிவனம் பகுதியை தாண்டிய பிறகு கூட்டேரிப்பட்டு என்கின்ற இடத்தில் இடது புறமாக திரும்பி மயிலம், திருவக்கரை, திருமங்கலம் மதுக்கப்பட்டு உள்ளிட்ட இடங்கள் வழியாக சென்று மீண்டும் விழுப்புரம் பகுதியை அடைய வழிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இடத்தில் 0 டிராபிக் முறையை போக்குவரத்து துறை கடைபிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

குடிச்சுட்டு வந்தா நோ என்ட்ரி; தளபதி விஜய் போட்ட அதிரடி உத்தரவு - சூடுபிடிக்கும் த.வெ.க மாநாடு!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு