ரஜினி ரசிகர்களை பிளேடால் கிழித்த விஜய் ரசிகர்கள்; பேனர் வைத்ததில் ஏற்பட்ட சண்டையால் விபரீதம்...

 
Published : Jan 16, 2018, 10:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
ரஜினி ரசிகர்களை பிளேடால் கிழித்த விஜய் ரசிகர்கள்; பேனர் வைத்ததில் ஏற்பட்ட சண்டையால் விபரீதம்...

சுருக்கம்

Vijay fans splashed by Rajini fans Battered by the banner ...

ஈரோடு

ஈரோட்டில் பேனர் வைத்ததில் ரஜினி - விஜய் ரசிகர்கள் மோதிக் கொண்டதில் சண்டை முற்றிய நிலையில் ரஜினி ரசிகர்களை பிளேடால் கிழித்த விஜய் ரசிகர்கள் மூவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.

இந்தக் கோவில் திருவிழாவையொட்டி கோபி பகுதியில் பல்வேறு இடங்களில் அடியார்கள் சார்பில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

அதேபோல பாரியூர் நஞ்சகௌண்டம்பாளையம் பிரிவில் அந்தப் பகுதி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது.

அதேப் பகுதியைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ரத்தினவேல் (30), சதீஷ் (25), தியாகு (25) ஆகிய மூவரும் விளம்பர பலகை வைக்க எதிர்ப்பு தெரிவித்து ரஜினி ரசிகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஆத்திரமடைந்த நடிகர் விஜய் ரசிகர்கள் தங்களிடம் இருந்த பிளேடை எடுத்து பேனரை சேதப்படுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். விஜய் ரசிகர்கள் பிளேடால் கீறியதில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஜெகதீசன் (44), பழனிசாமி (46) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்த கோபிசெட்டிபாளையம் காவல் ஆய்வாளர் பாலமுரளிசுந்தரத்திடம் புஅகர் கொடுக்கபட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்து விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ரத்தினவேல், சதீஷ், தியாகு ஆகிய மூவரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!