ஹிமாச்சலில் இறந்த வெற்றி துரைசாமி.. இன்று சென்னை கொண்டுவரப்பட்ட அவர் உடல் - துவங்கிய இறுதி அஞ்சலி நிகழ்வு!

By Ansgar RFirst Published Feb 13, 2024, 7:52 PM IST
Highlights

Vetri Duraisamy : இமாச்சல் பிரதேசத்தில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமி அவர்களுடைய உடல் மீட்கப்பட்டு தற்பொழுது சென்னை கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலி நிகழ்வானது தற்பொழுது நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி 4ம் தேதி தனது நண்பர் மற்றும் ஓட்டுநருடன் இமாச்சலப் பிரதேசம் சென்ற சைதை துரைசாமி அவர்களுடைய மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் சாட்டிலைட் நதி அருகே விபத்துக்கு உள்ளாகியது. இந்த விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமி அவர்களுடைய ஓட்டுனரும், நண்பரும் மீட்கப்பட்ட நிலையில் வெற்றி துரைசாமியின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது. 

சுமார் 8 நாட்களாக அவரை சட்லஜ் நதிக்கரையோரம் பலர் தேடி வந்த நிலையில், அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் பாறைகளுக்கு இடையில் சிக்கி இருந்த வெற்றி துரைசாமி அவர்களுடைய உடல் ஸ்கூபா டைவிங் வீரர்கள் மூலம் மீட்க பட்டு, அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று மாலை அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டது. 

Latest Videos

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்; திமுக வாக்குறுதியை சுட்டிக்காட்டி விவசாயிகள் போராட்டம்

தனது மகனின் உடலை மீட்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக கூறியிருந்தார் சைதை துரைசாமி அவர்கள். அதன்படி அந்த ஸ்கூபா டைவிங் வீரர்கள் குழுவிற்கு அவர் அந்த பணத்தை வழங்குவதாக ஹிமாச்சல் அரசும் இப்பொது தெரிவித்துள்ளது. உறைந்த நிலையில் மீட்கப்பட்ட வெற்றியின் உடல் இன்று மாலை சென்னை கொண்டுவரப்பட்டது. 

மேலும் இன்று இரவே அவருடைய இறுதி அஞ்சலி நிகழ்வானது நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் அவரது வீட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று மதியம் வெற்றி துறைசாமியின் மிக நெருங்கிய நண்பரான பிரபல நடிகர் அஜித்குமார் நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதல்களை தெரிவித்து சென்றார். 

மண்டை ஓடுகளுடன் திடீரென செல்போன் டவரில் ஏறி போராடிய விவசாயிகள்; திருச்சியில் பரபரப்பு

click me!