
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வேலூர் மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திமுகவின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனின் சொந்த மாவட்டம் என்பதால் தேர்தல் பணிகளில் திமுகவினர் சுறுசுறுப்பாக ஈடுபட்டன. இந்த நிலையில், வாக்குப்பதிவு நடப்பதற்குள்ளாகவே 7, 8 ஆகிய இரண்டு வார்டுகளையும் போட்டியின்றி திமுக வேட்பாளர்கள் கைப்பற்றிவிட்டனர். 7வது வார்டில் புஷ்பலதா வன்னியராஜா, 8வது வார்டில் சுனில்குமார் ஆகியோர்தான் வெற்றிபெற்ற வேட்பாளர்கள். துணை மேயர், நான்கு மண்டலக்குழுத் தலைவர்கள் பதவிகளுக்கும் திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, வேலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் திமுக 23, அதிமுக 6, பாஜக 1, சுயேட்சை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
திமுக வேட்பாளர்கள் வெற்றி:
வார்டு 1ல் திமுகவை சேர்ந்த அன்பு வெற்றிபெற்றுள்ளார். அதேபோல் 2வது வார்டில் திமுகவை சேர்ந்த விமலா, 3வது வார்டில் ஜி.ரவிகுமாா், 4வது வார்டில் திமுகவை சேர்ந்த லோ.சித்ரா, 5வது வார்டில் திமுகவை சேர்ந்த ம.சித்ரா, 7வது வார்டில் திமுகவை சேர்ந்த புஷ்பலதா, 8வது வார்டில் திமுகவை சேர்ந்த சுனில் குமாா், 9வது வார்டில் திமுகவை சேர்ந்த சிவசங்கரி, 12வது வார்டில் திமுகவை சேர்ந்த சரவணன், 17வது வார்டில் திமுகவை சேர்ந்த காஞ்சனா, 31வது வார்டில் திமுகவை சேர்ந்த எ.சுஜாதா, 32வது வார்டில் திமுகவை சேர்ந்த ஐ.சாஜிதா இம்தியாஸ், 33வது வார்டில் திமுகவை சேர்ந்த சு.ஷண்முகம், 36வது வார்டில் திமுகவை சேர்ந்த கா.யூசுப் கான், 37வது வார்டில் திமுகவை சேர்ந்த திருநங்கை ரா.கங்கா, 38வது வார்டில் திமுகவை சேர்ந்த த.திருப்பாவை, 39வது வார்டில் திமுகவை சேர்ந்த விஜயகுமார், 44வது வார்டில் திமுகவை சேர்ந்த தா.தவமணி, 46 வது வார்டில் திமுகவை சேர்ந்த மாலதி, 51வது வார்டில் திமுகவை சேர்ந்த ஜெயசங்கர், 52வது வார்டில் திமுகவை சேர்ந்த மகேந்திரன், 54வது வார்டில் திமுகவை சேர்ந்த பி.சுதாகர், 57வது வார்டில் திமுகவை சேர்ந்த ஆண்டாள் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுக வேட்பாளர்கள் வெற்றி:
10வது வார்டில் அதிமுகவை சேர்ந்த பொ.ரமேஷ், 16வது வார்டில் அதிமுகவை சேர்ந்த கே.அமலநிருபா, 45வது வார்டில் அதிமுகவை சேர்ந்த கோ.அஸ்மிதா, 47வது வார்டில் அதிமுகவை சேர்ந்த எழிலரசன், 50வது வார்டில் அதிமுகவை சேர்ந்த அருணா, 55வது வார்டில் அதிமுகவை சேர்ந்த எஸ்.சரவணன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பாஜகவை வேட்பாளர் வெற்றி:
18வது வார்டில் பாஜகவை சேர்ந்த எஸ்.சுமதி வெற்றி பெற்றுள்ளனர்.
சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்:
6வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட சீனிவாசன் வெற்றிபெற்றுள்ளார். அதேபோல் 53வது வார்டிலும் சுயேட்சையாக போட்டியிட்ட பாபி வெற்றிப்பெற்றுள்ளார். மற்ற வார்களின் முடிவு அறிவிக்கப்படவில்லை. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.