Sivakasi Corporation Election Result 2022 : சிவகாசி மாநகராட்சியை கைப்பற்றிய திமுக கூட்டணி..

Published : Feb 22, 2022, 11:15 AM ISTUpdated : Feb 22, 2022, 10:10 PM IST
Sivakasi Corporation Election Result 2022 : சிவகாசி மாநகராட்சியை கைப்பற்றிய திமுக கூட்டணி..

சுருக்கம்

சிவகாசி மாநகராட்சியை திமுக கைபற்றியுள்ளது.மொத்தமுள்ள 48 வார்டுகளில் 30 இடங்களில் திமுக கூட்டணி வென்றுள்ளது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை  இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சிவகாசி மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி  வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே எதிர்ப்பார்ப்பை கூட்டிக்கொண்டு இருந்தது.

மொத்தமுள்ள 48 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 30வார்டுகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளனர். அதிமுக 11 , சுயேட்சை 6, பாஜக 1 வார்டுகளில்வெற்றி பெற்றுள்ளனர்.சிவகாசி மாநகராட்சி மேயர் பதவி  பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்படலாம் என அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பொதுப்பிரிவு பெண்கள் என ஒதுக்கப்பட்டுள்ளதால் என்ன செய்வதென்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் ஆரம்பத்தில் குழப்பமடைந்தனர். சிவகாசி தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வாக அரசன் அசோகன் இருக்கிறார். விருதுநகர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யாக மாணிக்கம்தாகூர் இருக்கிறார்.

இந்தத் தொகுதிக்குட்பட்ட சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளிலும் காங்கிரஸுக்கு செல்வாக்கு இருப்பதால் மேயர் பதவியைக் கேட்டு அடம்பிடித்தது காங்கிரஸ். அதேநேரத்தில், மாநகராட்சி முதல் மேயர் பதவியை விட்டுத்தர முடியாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளதாம் தி.மு.க. சிவகாசியில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் வலுவாக உள்ளன. இந்நிலையில் சிவகாசி மாநகராட்சியை அதிக வார்டுகளில் வென்று திமுக தனது வசமாக்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி