Walajabad Panjayat Election Result 2022 : மீண்டும் தி.மு.க. வசம் வந்த வாலாஜாபாத் - அபார வெற்றி பெற்று அசத்தல்

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 22, 2022, 11:11 AM ISTUpdated : Feb 22, 2022, 11:22 AM IST
Walajabad Panjayat Election Result 2022 : மீண்டும் தி.மு.க. வசம் வந்த வாலாஜாபாத் - அபார வெற்றி பெற்று அசத்தல்

சுருக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாலாஜாபாத் பேரூராட்சியில் தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை  இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை பணிகளில் தமிழகம் முழுக்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. கோட்டியாக இருந்து வந்த வாலாஜாபாத் பேரூராட்சியை கடந்த தேர்தலில் அ.தி.மு.க.கைப்பற்றி இருந்தது. 

இந்த நிலையில், தற்போதைய தேர்தலில் வாலாஜாபாத் பேரூராட்சியை யார் கைப்பற்றுவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 இடங்களையும், அ.தி.மு.க. 5 இடங்களையும் பெற்றுள்ளன. 

இதனால் வாலாஜாபாத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 40 ஆண்டுகளாக தி.மு.க. வசமிருந்த வாலாஜாபாத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது அ.தி.மு.க. கைப்பற்றியது. இந்த நிலையில், ஆட்சியில் உள்ள தி.மு.க. மீண்டும் வாலாஜாபாத் பேரூராட்சியை கைப்பற்றி இருக்கிறது. 
 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்
Tamil News Live today 08 December 2025: 1 லட்சம் பேர் வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஓலா பின்னுக்கு தள்ளி சாதனை.. யார் தெரியுமா?