அம்பேத்கர், பெரியார் இடத்தைப் பிடித்த சிவகார்த்திகேயன்! பள்ளி மாணவர்களுக்கு Free Show!

 
Published : Jan 26, 2018, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
அம்பேத்கர், பெரியார் இடத்தைப் பிடித்த சிவகார்த்திகேயன்! பள்ளி மாணவர்களுக்கு Free Show!

சுருக்கம்

Velaikkaran free screening for school students for 15 days

உலகமே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம். காரணம் சிவகார்த்திகேயன் மற்றும் மோகன் ராஜா கூட்டணி. அதோடு சிவகார்த்திகேயன் படம் என்றால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு ஒருபக்கம், அடுத்து சினிமாகாரர்களின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் என்ன சாதிக்கிறார் என்பது தான் அதை மீண்டும் நிருபித்துள்ளார். இப்படம் வெற்றியோடு வசூலிலும் மிக பெரிய சாதனை என்று தான் சொல்லணும். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி வந்ததால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

இந்த படத்தில், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ரெமோ படத்தை தயாரித்த 24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரித்துள்ளது.

கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், வேலைக்காரன் திரைப்படம் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட, பட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து பட நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வேலைக்காரன் திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த பெருவெற்றிக்கும், பேராதரவிற்கும் முதல் நன்றி. வெற்றியோடு மக்களுக்கான நல்ல கருத்தை முன்னெடுத்து சென்றதில் மிக மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு உறுதுணையாய் நின்று அடித்தளமிட்ட அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறையின் 24 அமைப்புகளை சேர்ந்த அனைத்து தொழிலாள நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகளின் பாராட்டுக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, நடுநிலையான, நேர்மையான விமர்சனங்களை மனதார ஏற்கிறோம். இந்த நேரத்தில் முக்கிய அறிவிப்பாக வேலைக்காரன் படத்தில் எடுத்து கொள்ளப்பட்ட உணவு பிரச்சனையின் ஆழத்தையும், முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்தையும் வலியுறுத்தலையும் ஏற்று வேலைக்காரன் திரைப்படத்தை பள்ளி மாணவர்கள் பார்ப்பதற்கு ஏற்றவாறு சில காட்சிகளை நீக்கிவிட்டு, இலவசமாக திரையரங்குகளில் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 15 வரை திரையிட முடிவு செய்துள்ளோம். 

பள்ளி நிர்வாகத்தினர் எங்களை தொடர்பு கொண்டால் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் திரையரங்குகளில் படத்தை திரையிட விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உதவியோடு ஆவன செய்ய தயாராக உள்ளோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொடர்பு கொள்ள 7010165044 மற்றும் 9600045747 ஆகிய எண்களையோ அல்லது velaikkaran.schools@24amstudios.com என்கிற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 23 December 2025: தொகுதி பங்கீடு.. எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பாஜக பேச்சுவார்த்தை
தமிழ்நாடு என்ற பெயர் திமுகவிற்கு கசக்கிறதா..? இது தான் நீங்கள் தமிழை வளர்க்கும் முறையா..? சீமான் கேள்வி