“காதாலின்னு நெனச்சி தப்பா கை வச்சிட்டேன்...” காவல் நிலையத்தில் கதறிய வாலிபர்!

 
Published : Jan 26, 2018, 12:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
“காதாலின்னு நெனச்சி தப்பா கை வச்சிட்டேன்...” காவல் நிலையத்தில் கதறிய வாலிபர்!

சுருக்கம்

The boy confessed that he thought he was a girlfriend

முன்னாள் காதலி என நினைத்து வேறு ஒரு பெண்ணை தாக்கி நகையை பறித்த சென்ற வாலிபர் கைது. காதலி நினைவாக அந்த நகையை பிரேம் போட்டு சுவரில் மாட்டிவைத்த பயங்கரம் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையை சேர்ந்த குணசுந்தரி. சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த குனசுந்தரியை மர்மநபர் ஒருவர் கல்லால் தாக்கி அவர் அணிந்திருந்த 11 பவுன் நகைகளை பறித்துச் சென்றுவிட்டார். தாக்குதலில் காயமடைந்த குணசுந்தரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. நகையை கொள்ளையடித்ததாக ஜான்சன்  என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தை சேர்ந்த இவர் இரும்பு கம்பெனி ஒன்றில் வேலைபார்க்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்த பரபரப்பு  வாக்குமூலம் அளித்தார் இதில், சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் நான் தனியாக வீடு எடுத்து சில மாதங்கள் தங்கியிருந்தேன். அப்போது அங்கு வசித்த ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால் அந்த பெண் என்னை ஏமாற்றிவிட்டு வேறோருவரை திருமணம் செய்துகொண்டார். நான் கொஞ்சம் நாட்கள் எனது காதலியின் நினைவாகவே வாழ்ந்து வந்தேன். அந்தந பிறகு  எனது காதலியை பழிவாங்குவதற்காக நான் திரும்பவும் அங்கு சென்றேன்.

அப்போது எனது காதலி என்று நினைத்து இரவில் ஒரு பெண்ணை (குணசுந்தரியை) தாக்கி அவர் அணிந்திருந்த 11 பவுன் நகைகளையும் பறித்து வந்துவிட்டேன். காதலியின் நினைவாக அந்த நகையை பிரேம் போட்டு சுவரில் பத்திரமாக மாட்டி வைத்திருந்தேன். இப்போதுதான் நான் கைவைத்தது எனது காதலியின் கழுத்தில் அல்ல வேறு ஒரு பொண்ணுடைய நகை என தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ஜான்சன் பிரேம் போட்டு மாட்டி வைத்திருந்த 11 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டு குனசுந்தரியிடம் கொடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அரசு வேலை மட்டும் அல்ல… தனியார் வேலைக்கும் வழிகாட்டும் மையங்கள்! அரசு சொன்ன குட் நியூஸ்
அரசியல் எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் டீல் செய்யும் திமுக.. பெருமிதமாக மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்