Vegetable Price Hike : முருங்கைக்காய் கிலோ 320 ரூபாய் !! கிடுகிடுவென உயரும் காய்கறி விலை..

By Ganesh RamachandranFirst Published Dec 7, 2021, 11:44 AM IST
Highlights

கடந்த சில நாட்களாகவே காய்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு கிலோ முருங்கைக்காய் 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கனமழை காரணமாக சத்திஸ்கர், கர்நாடகா, மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி, முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. தற்போது ஆந்திரா, கர்நாடகா, கிரிஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து மட்டுமே தக்காளி வந்துள்ளது. தினசரி 800 டன் முதல் 900 டன் வரை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரும். ஆனால் தற்போது வெறும் 300 டன் மட்டுமே வந்துள்ளது. இதனால் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மொத்த வியாபாரத்திலேயே தக்காளி கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், சில்லரை விற்பனையில் 120 ரூபாய் வரையில் விற்பனையாவதாகவும் கூறுகின்றனர் வியாபாரிகள்.

தக்காளி ஒரு பக்கம் ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்து வரும் நிலையில், முருங்கைக்காயும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. நேற்று கிலோவுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்த முருகைக்காய் விலை, இன்று சில்லரை விற்பனையில் பல இடங்களில் கிலோ 250 முதல் 320 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு முருங்கைக்காய் 40 ரூபாய்க்கு விற்கப்படுவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எப்போது இந்த விலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தெரியவில்லை என்றும், அடுத்த ஒரு வாரத்துக்காவது விலை உயர்வு நீடிக்கும் என்கின்றனர் கோயம்பேடு வியாபாரிகள்.

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல் இதோ..

வெங்காயம் 36/30/26
நவீன் தக்காளி 90/85
நாட்டு தக்காளி 90/85
உருளை  26/22/18
சின்ன வெங்காயம் 60/50/45
ஊட்டி கேரட் 70/60/55
பெங்களூர் கேரட் 50
பீன்ஸ் 70/65/50
பீட்ரூட். ஊட்டி 55/50
கர்நாடக பீட்ரூட் 35/25
சவ் சவ் 25/22
முள்ளங்கி 45 /40
முட்டை கோஸ் 40/35
வெண்டைக்காய் 60/50
உஜாலா கத்திரிக்காய் 80/70
வரி கத்திரி  60/55
காராமணி 65
பாவக்காய் 50/40
புடலங்காய் 50/45
சுரக்காய் 35/30
சேனைக்கிழங்கி 17/15
முருங்ககாய் .170/150
சேம கிழங்கு 25/15
காலிபிளவர் 38/35
வெள்ளரிக்காய் 20/18
பச்சை மிளகாய் 35/30
பட்டாணி 40/30
இஞ்சி 45/20
பூண்டு 150/90/60
அவரைக்காய் 80/75
மஞ்சள் பூசணி 15
வெள்ளை பூசனி.20
பீர்க்கங்காய் 60/50
எலுமிச்சை 30
நூக்கள் 60
கோவைக்காய் 60/50
கொத்தவரங்காய் 50
வாழைக்காய் 6/5
வாழைதண்டு,மரம் 40
வாழைப்பூ 15
பச்சைகுடமிளகாய்
70/60
வண்ண குடமிளகாய்.250
கொத்தமல்லி 4
புதினா 4
கருவேப்பிலை 40
அனைத்து கீரை.40/35
தேங்காய் .  34/35

click me!